×

‘8ம் வகுப்பு படித்திருந்தால் போதும்’ தொழில் தொடங்க கடனுதவி: ஆட்சியரின் அதிரடி அறிவிப்பு!

சென்னையில் 8ம் வகுப்பு படித்தவர்களுக்கு தொழில் தொடங்க கடனுதவி அளிக்கப்படும் என சென்னை ஆட்சியர் சீதாலட்சுமி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘2011 ஆம் ஆண்டு முதல் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. இதன் மூலம் 25% மானியத்துடன் உற்பத்தி தொழில்களுக்கு ரூ.10 லட்சம் கடனும், சேவை தொழில்கள் மற்றும் வியாபாரத்துக்கு ரூ.5 லட்சம் கடனும் வழங்கி வருகிறது. இந்த கடனுதவி பெறுவதற்கு 8ஆம் வகுப்பு படித்திருக்க வேண்டும். ஆண்டு
 

சென்னையில் 8ம் வகுப்பு படித்தவர்களுக்கு தொழில் தொடங்க கடனுதவி அளிக்கப்படும் என சென்னை ஆட்சியர் சீதாலட்சுமி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘2011 ஆம் ஆண்டு முதல் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. இதன் மூலம் 25% மானியத்துடன் உற்பத்தி தொழில்களுக்கு ரூ.10 லட்சம் கடனும், சேவை தொழில்கள் மற்றும் வியாபாரத்துக்கு ரூ.5 லட்சம் கடனும் வழங்கி வருகிறது. இந்த கடனுதவி பெறுவதற்கு 8ஆம் வகுப்பு படித்திருக்க வேண்டும். ஆண்டு வருமானம் ரூ.5 லட்சத்துக்குள் இருக்க வேண்டும். பொதுப்பிரிவினர் 35 வயதிற்குள்ளாகவும் பிசி, எம்பிசி, எஸ்சி, எஸ்டி, பெண்கள், மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்டோருக்கு 45 வயதிற்குள்ளாகவும் இருக்க வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இந்த திட்டத்தில் நடப்பாண்டில் 285 பயனாளிகளுக்கு கடன் வழங்கப்பட்டுள்ளதாகவும், கடனுதவிக்கு விண்ணப்ப விரும்பும் நபர்கள் www.msmeonline.tn.gov.in/uyegp என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம் என்றும் இது குறித்த விவரங்களை அறிய 9487239561 என்ற எண்ணை தொடர்பு கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.