×

சென்னையைக் கையகப்படுத்தத் திட்டமிட்ட மத்திய அரசு… ஊரடங்கை கொண்டுவந்த எடப்பாடி பழனிசாமி! – லாக்டவுன் பின்னணி

சென்னையில் கொரோனா பரவலைக் காரணம் காட்டி சென்னையை மத்திய அரசு தன்னுடைய நேரடி கட்டுப்பாட்டில் கொண்டுவர முயற்சி மேற்கொண்டதாகவும் அதைத்தடுக்க ஊரடங்கை முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது. நாடு முழுக்க கொரோனா தொற்று பாதிப்பு உள்ளது. மகாராஷ்டிராவில் மும்பை உள்ளிட்ட பகுதிகளில் கொரோனா தீவிரமாக உள்ளது. அதற்கு அடுத்த இடத்தில் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள டெல்லியில் கொரோனா தொற்று உள்ளது. மூன்றாவது இடத்தில் சென்னை உள்ளது. மும்பை, டெல்லியில் உள்ள கொரோனாத்
 

சென்னையில் கொரோனா பரவலைக் காரணம் காட்டி சென்னையை மத்திய அரசு தன்னுடைய நேரடி கட்டுப்பாட்டில் கொண்டுவர முயற்சி மேற்கொண்டதாகவும் அதைத்தடுக்க ஊரடங்கை முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

நாடு முழுக்க கொரோனா தொற்று பாதிப்பு உள்ளது. மகாராஷ்டிராவில் மும்பை உள்ளிட்ட பகுதிகளில் கொரோனா தீவிரமாக உள்ளது. அதற்கு அடுத்த இடத்தில் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள டெல்லியில் கொரோனா தொற்று உள்ளது. மூன்றாவது இடத்தில் சென்னை உள்ளது. மும்பை, டெல்லியில் உள்ள கொரோனாத் தொற்று பற்றி பெரிதும் அலட்டிக்கொள்ளாத மத்திய அரசு, சென்னையில் கொரோனாத் தொற்று பரவலை உன்னிப்பாகக் கவனித்து வந்தது. தமிழக அரசின் செயல்பாடு போதுமானதாக இல்லை, கொரோனா பரவல் அதிகரித்தால் சென்னை நகரத்தை மத்திய அரசு தன்னுடைய நேரடி கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுசெல்ல நேரிடும் என்று தலைமைச் செயலாளர் மூலமாக எடப்பாடி பழனிசாமிக்கு கூறப்பட்டதாக கோட்டை வட்டாரங்கள் கூறுகின்றன.

சென்னையில் கொரோனாவைக் கட்டுப்படுத்த மண்டல வாரியாக ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நியமனம், சென்னைக்கு என்று பிரத்தியேகமாக சிறப்பு அதிகாரி நியமனம், அமைச்சர்கள் நியமனம் என்று பல்வேறு நியமனம் மட்டுமே நடந்து கொண்டிருக்கிறது. ஆனால் சென்னையில் கொரோனாவைக் கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்கவில்லை என்று உளவுத்துறை ரிப்போர்ட் மத்திய அரசு கைக்கு கிடைத்ததாக கூறப்படுகிறது. இதனால் கோபம் அடைந்த மத்திய அரசு சென்னை நேரடியாக கண்காணிப்பது தொடர்பான முடிவெடுக்க உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

உடனடியாக களத்தில் இறங்கிய எடப்பாடி பழனிசாமி மருத்துவ நிபுணர்களுடன் அவசர ஆலோசனை நடத்தி, அமைச்சரவை கூட்டி சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் ஊரடங்கை அமல்படுத்த முடிவு செய்தாராம். தற்போது கொரோனா பரிசோதனை எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. முழு ஊரடங்கு அனைத்து தரப்பினராலும் முழு ஒத்துழைப்போடு நடந்து வருகிறது. இதனால் விரைவில் கொரோனா கட்டுப்பாட்டுக்குள் வரும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளதாக கோட்டை வட்டாரங்கள் கூறுகின்றன.