×

பேருந்துகளில் சிசிடிவி கேமரா! அசத்தும் திமுக அரசு

நிர்பயா திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக சென்னையில் உள்ள 2,500 பேருந்துகளில் 71 கோடி செலவில் சிசிடிவி பொருத்தும் பணி நடைபெற்று வருவதாக போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் தகவல் தெரிவித்துள்ளார். சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தமிழகத்தில் கடந்த 12 ஆம் தேதி முதல் தற்போது வரை அரசு மாநகர பேருந்துகளில் 78 லட்ச மகளிர் பயணம் செய்துள்ளனர். 12 ஆம் தேதி முதல் பயணம் செய்யும் பெண்களுக்கு டிகெட் வழங்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில்
 

நிர்பயா திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக சென்னையில் உள்ள 2,500 பேருந்துகளில் 71 கோடி செலவில் சிசிடிவி பொருத்தும் பணி நடைபெற்று வருவதாக போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் தகவல் தெரிவித்துள்ளார்.

சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தமிழகத்தில் கடந்த 12 ஆம் தேதி முதல் தற்போது வரை அரசு மாநகர பேருந்துகளில் 78 லட்ச மகளிர் பயணம் செய்துள்ளனர். 12 ஆம் தேதி முதல் பயணம் செய்யும் பெண்களுக்கு டிகெட் வழங்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் மொத்த பயணம் செய்பவர்களில் 56% பெண்கள், நாள் ஒன்றுக்கு 28 லட்சம் பெண்கள் பயணம் செய்கின்றனர். அதிகமாக பெண்களே பயணம் செய்கின்றனர்.

திருநெல்வேலியிலேயே 68% பெண்கள் பேருந்துகளில் பயணம் செய்கின்றனர். மேலும் தற்போது வரை 5,741 திருநங்கைகள் இலவசமாக பேருந்துகளில் பயணம் மேற்கொண்டுள்ளனர். 51,615 மாற்று திறனாளிகள் மற்றும் அவர்களுடைய உதவியாளர்கள் என 8,396 பேர் இலவசமாக பயணம் செய்துள்ளனர்.

இத்திட்டத்திற்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. பல ஆண்டுகளாக பேருந்து இல்லாமல் இருந்த செங்கல்பட்டு மாவட்டம் பழவேலி பகுதியில் முதலமைச்சர் ஆணைக்கு இணங்க நேற்று முதல் பேருந்து இயக்கப்பட்டுள்ளது. லாபத்திற்காக பேருந்துகள் இயக்கப்படுவது அல்ல. பொதுமக்களுக்காகவே இயக்கப்படுகிறது. டீசல் விலை அதிகமாக இருந்தாலும் மற்ற மாநிலங்களை ஒப்பிடும்போது தமிழகம் தான் டிக்கெட் விலையை குறைவாக விற்கிறோம்.

நிர்பயா திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக சென்னையில் உள்ள 2,500 பேருந்துகளில் 71 கோடி ரூபாயில் சிசிடிவி உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்பு உபகரணங்கள் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது” எனக் கூறினார்.