×

சமூக ஊடக வீடியோக்களை கண்காணிக்க வாரியம் அமைக்க கோரி வழக்கு! – மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் நோட்டீஸ்!

சமூக ஊடகங்களைக் கண்காணிக்க வாரியம் அமைக்க உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் மத்திய அரசு பதில் அளிக்கும்படி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சமூக ஊடகங்களில் நல்ல கருத்துக்களை விட விஷமக் கருத்துக்கள் அதிகம் பரப்பப்படுகின்றன. கறுப்பர் கூட்டம், மாரிதாஸ் என்று பல விதங்களில் சமூக ஊடகங்களில் அவதூறு கருத்து பரப்பப்படுகிறது. ஃபேஸ்புக், ட்விட்டர், யூடியூபில் சாதி, மத மோதல்களை உருவாக்கும் வகையில் பல வீடியோக்கள் வெளியாகிக்கொண்டே இருக்கின்றன. இதைத் தவிர்க்க சென்சார் போர்டு போன்று
 

சமூக ஊடகங்களைக் கண்காணிக்க வாரியம் அமைக்க உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் மத்திய அரசு பதில் அளிக்கும்படி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


சமூக ஊடகங்களில் நல்ல கருத்துக்களை விட விஷமக் கருத்துக்கள் அதிகம் பரப்பப்படுகின்றன. கறுப்பர் கூட்டம், மாரிதாஸ் என்று பல விதங்களில் சமூக

ஊடகங்களில் அவதூறு கருத்து பரப்பப்படுகிறது. ஃபேஸ்புக், ட்விட்டர், யூடியூபில் சாதி, மத மோதல்களை உருவாக்கும் வகையில் பல வீடியோக்கள் வெளியாகிக்கொண்டே இருக்கின்றன. இதைத் தவிர்க்க சென்சார் போர்டு போன்று ஒரு தனி வாரியம் அமைக்க வேண்டும் என்று வழக்கறிஞர் சுதன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.


அந்த மனுவில், “தற்போது இணைய பயன்பாடு அதிகரித்துவிட்டது. ஆன்லைன் ஷாப்பிங், ஆன்லைன் கல்வி என்று அதிகரித்துள்ளது. இந்த நிலையில் சமூக ஊடகங்களில் குறும்படம் என்ற பெயரில் ஆபாச வீடியோக்கள் அதிகம் பதிவிடப்படுகின்றன. திரைப்படங்களைத் தணிக்கை செய்ய சென்சார் போர்டு உள்ளதை போல, சமூக ஊடகங்களில் வெளியாகும் வீடியோக்களை தனிக்கை செய்யத் தனி அமைப்பு ஒன்றை உருவாக்க வேண்டும்.

அதுவரை சமூக ஊடகங்களில் வீடியோக்கள் வெளியிடுவதைத் தடை செய்ய வேண்டும்” என்று கோரியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஹேமலதா அமர்வுக்கு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. இது மிக முக்கியமான வழக்கு என்று குறிப்பிட்ட நீதிபதிகள், இது தொடர்பாக மத்திய அரசு நான்கு வாரத்தில் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளனர்.