×

தேசிய கோடி அவமதிப்பு: எஸ்.வி சேகர் மீது வழக்குப்பதிவு!

சமீபத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை அவதூறாக பேசியும், தேசியக் கோடியை அவமதிக்கும் விதமாகவும் எஸ்.வி.சேகர் வீடியோ வெளியிட்டிருந்தார். அந்த வீடியோ மிகவும் சர்ச்சைக்குள்ளானது. அதற்கு எஸ்.வி சேகர் நன்றி மறந்தவர், அதிமுக தான் அவரை தூக்கி விட்டது என்பதை அவர் அறியாமல் பேசிக் கொண்டிருக்கிறார். அவரை நாங்கள் ஒரு பொருட்டாக மதிக்கவில்லை என்றெல்லாம் அமைச்சர்கள் கருத்து தெரிவித்தனர். இதனிடையே எஸ்.வி சேகர் தேசிய கோடியை அவமதிக்கும் விதாமாக நடந்து கொண்டதாக நுங்கம்பாக்கத்தை சேர்ந்த ராஜரத்தினம் என்பவர் சென்னை
 

சமீபத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை அவதூறாக பேசியும், தேசியக் கோடியை அவமதிக்கும் விதமாகவும் எஸ்.வி.சேகர் வீடியோ வெளியிட்டிருந்தார். அந்த வீடியோ மிகவும் சர்ச்சைக்குள்ளானது. அதற்கு எஸ்.வி சேகர் நன்றி மறந்தவர், அதிமுக தான் அவரை தூக்கி விட்டது என்பதை அவர் அறியாமல் பேசிக் கொண்டிருக்கிறார். அவரை நாங்கள் ஒரு பொருட்டாக மதிக்கவில்லை என்றெல்லாம் அமைச்சர்கள் கருத்து தெரிவித்தனர். இதனிடையே எஸ்.வி சேகர் தேசிய கோடியை அவமதிக்கும் விதாமாக நடந்து கொண்டதாக நுங்கம்பாக்கத்தை சேர்ந்த ராஜரத்தினம் என்பவர் சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார்.

அந்த புகாரின் பேரில், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை கமிஷனர் மகேஷ்குமார் கூறியிருந்தார். இந்த நிலையில் பாஜகவை சேர்ந்த எஸ்.வி சேகர் மீது தேசிய கவுரவ பாதுகாப்பு சட்டம் உள்ளிட்ட 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.