×

விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் மர்ம மரணம்: 4 காவலர்கள் மீது வழக்குப்பதிவு!

பேரையூர் அருகே இளைஞர் மர்மமான முறையில் உயிரிழந்தது தொடர்பாக 4 காவலர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மதுரை மாவட்டம் பேரையூர் அருகே இருக்கும் அணைக்கரைப்பட்டி கிராமத்தில் வசித்து வருபவர் கண்ணியப்பன். இவரது மகன் இதயக்கனியும் அதே பகுதியை சேர்ந்த புனிதா என்ற பெண்ணும் காதல் திருமணம் செய்து கொண்டதால் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஊரை விட்டு வெளியேற்றப்பட்டனர். இது தொடர்பாக புனிதாவின் பெற்றோர்கள் அளித்த புகாரின் பேரில், விசாரணை நடத்த இதயக்கனியின் தம்பி ரமேஷை போலீசார்
 

பேரையூர் அருகே இளைஞர் மர்மமான முறையில் உயிரிழந்தது தொடர்பாக 4 காவலர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

மதுரை மாவட்டம் பேரையூர் அருகே இருக்கும் அணைக்கரைப்பட்டி கிராமத்தில் வசித்து வருபவர் கண்ணியப்பன். இவரது மகன் இதயக்கனியும் அதே பகுதியை சேர்ந்த புனிதா என்ற பெண்ணும் காதல் திருமணம் செய்து கொண்டதால் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஊரை விட்டு வெளியேற்றப்பட்டனர். இது தொடர்பாக புனிதாவின் பெற்றோர்கள் அளித்த புகாரின் பேரில், விசாரணை நடத்த இதயக்கனியின் தம்பி ரமேஷை போலீசார் விசாரணைக்கு அழைத்து சென்றுள்ளனர்.

இந்த நிலையில் இன்று காலை ஊரை விட்டு 5 கி.மீ வெளியே ரமேஷ் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இதயக்கனியை அழைத்து வரவில்லை என்றால் உங்கள் மீது நடவடிக்கை எடுப்போம் என கூறியதால் அச்சத்தில் அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், விசாரணைக்கு அழைத்து சென்ற போலீசார் அவரை அடித்து கொலை செய்து விட்டு மரத்தில் தொங்க விட்டிருப்பதாக குற்றஞ்சாட்டிய உறவினர்கள் அப்பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், சம்பந்தப்பட்ட போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.

இதனையடுத்து இளைஞர் மர்மமான முறையில் உயிரிழந்தது தொடர்பாக சாப்டூர் காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் காவலர் ஜெயக்கண்ணன் மற்றும் புதியராஜா உட்பட 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.