×

‘பானுமதி ராமகிருஷ்ணா’ படத்துக்கு எதிரான வழக்கை தள்ளுபடி செய்த உயர் நீதிமன்றம்!

சென்னையில் உள்ள பரணி ஸ்டூடியோ உரிமையாளரும் மறைந்த பானுமதியின் மகனுமான டாக்டர் பரணி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், ‘எனது தாய் பானுமதி ராமகிருஷ்ணா பிரபலமான நடிகை ஆவார். ஐதராபாத்தை சேர்ந்த நார்த்ஸ்டார் என்டர்டெய்ன்மெண்ட் என்ற தயாரிப்பு நிறுவனம் ‘பானுமதி ராமகிருஷ்ணா’ என்ற பெயரில் படம் தயாரித்துள்ளது. இப்படத்தை இணையத்தில் வெளியிடவும் இந்நிறுவனம் முடிவு செய்துள்ளது. டிரைலர் காட்சிகளில் எனது தாயாரின்இளமை காலத்தில் நடந்த சம்பவங்கள் தொடர்புப்படுத்தி காட்சிகள் எடுக்கப்பட்டுள்ளன. இதில்
 

சென்னையில் உள்ள பரணி ஸ்டூடியோ உரிமையாளரும் மறைந்த பானுமதியின் மகனுமான டாக்டர் பரணி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், ‘எனது தாய் பானுமதி ராமகிருஷ்ணா பிரபலமான நடிகை ஆவார். ஐதராபாத்தை சேர்ந்த நார்த்ஸ்டார் என்டர்டெய்ன்மெண்ட் என்ற தயாரிப்பு நிறுவனம் ‘பானுமதி ராமகிருஷ்ணா’ என்ற பெயரில் படம் தயாரித்துள்ளது.

 

இப்படத்தை இணையத்தில் வெளியிடவும் இந்நிறுவனம் முடிவு செய்துள்ளது. டிரைலர் காட்சிகளில் எனது தாயாரின்இளமை காலத்தில் நடந்த சம்பவங்கள் தொடர்புப்படுத்தி காட்சிகள் எடுக்கப்பட்டுள்ளன. இதில் வரும் காட்சிகள் எனது தாயாரின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் உள்ளது. எனவே பானுமதி ராமகிருஷ்ணா என்ற தலைப்பில் உருவாகியுள்ள இப்படத்திற்கு தடை விதிக்க வேண்டும். எனது தாயாரின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் அவரின் தனிப்பட்ட வாழ்க்கையை பாதிக்கும் வகையில் படம் இருப்பதால் ஒரு கோடி ரூபாயை இழப்பீடாக வழங்க உத்தரவிட வேண்டும்’ என்று அந்த மனுவில் தெரிவித்திருந்தார்.

இந்த வழக்கானது நீதிபதி என் சதீஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்த நிலையில் படத்தின் தயாரிப்பாளர்கள் சார்பில் பிரபலமான ஒரு பெயருக்கு காப்புரிமை கோர முடியாது. மேலும் இது மனுதாரர் தாயாரின் வாழ்க்கையை சம்பந்தப்பட்ட படம் அல்ல என்று வாதிடப்பட்டது. ஆனால் மனுதாரர் தரப்பிலோ படத்தின் தலைப்பு அவரின் தாயாரின் பெயராக இருப்பதுடன் ட்ரைலர் காட்சிகளும் அவரது வாழ்க்கை வரலாற்றை பிரதிபலிப்பதாகவே உள்ளது என்று வாதிடப்பட்டது.

ஆனால் இதுகுறித்து படத்தின் தயாரிப்பாளர் தரப்பில் வரும் வெள்ளிக்கிழமை அன்று படம் வெளியாக இருப்பதால், இப்படத்திற்கு தடை விதித்தால் பெரிய அளவில் நஷ்டம் ஏற்படும் என்றும் வேண்டுமென்றால் படத்தின் பெயரை பானுமதி மற்றும் ராமகிருஷ்ணா என்று மாற்றிக் கொள்வதாகவும் கூறப்பட்டது. இதை மனுதாரர் தரப்பு ஏற்றுக்கொண்டதை அடுத்து வழக்கை நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.