×

மீன் ஏற்றுமதிக்கு மீண்டும் கார்கோ விமான சேவை! – மீனவர்கள் வலியுறுத்தல்

கடல் உணவு ஏற்றுமதிக்கு கார்கோ விமானங்களை இயக்க வேண்டும் என்று மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மீன்களின் இனப்பெருக்கத்திற்காக ஆண்டுதோறும் கிழக்கு கடற்கரைப் பகுதியில் ஏப்ரல் 15 முதல் ஜூன் 15ம் தேதி வரை மீன்பிடிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு ஏப்ரல் 15ம் தேதிக்கு முன்னதாக ஊரடங்கு அறிவிக்கப்பட்டால் மீனவர்களும் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. இதனால், இந்த ஆண்டு மீன் பிடித் தடைக்காலம் முன்னதாகவே தொடங்கப்பட்டதாக கருதி மீன் பிடிக்க முன்னதாகவே முடிக்கப்பட்டது. தளர்வுகள் அளிக்கப்படுவதால் மீனவர்கள்
 

கடல் உணவு ஏற்றுமதிக்கு கார்கோ விமானங்களை இயக்க வேண்டும் என்று மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மீன்களின் இனப்பெருக்கத்திற்காக ஆண்டுதோறும் கிழக்கு கடற்கரைப் பகுதியில் ஏப்ரல் 15 முதல் ஜூன் 15ம் தேதி வரை மீன்பிடிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு ஏப்ரல் 15ம் தேதிக்கு முன்னதாக ஊரடங்கு அறிவிக்கப்பட்டால் மீனவர்களும் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. இதனால், இந்த ஆண்டு மீன் பிடித் தடைக்காலம் முன்னதாகவே தொடங்கப்பட்டதாக கருதி மீன் பிடிக்க முன்னதாகவே முடிக்கப்பட்டது.

தளர்வுகள் அளிக்கப்படுவதால் மீனவர்கள் இன்று முதல் மீன் பிடிக்க கடலுக்குச் செல்லலாம் என்று அறிவுறுத்தப்பட்டனர். ஆனால், இந்த உத்தரவை மீன்வர்கள் பெரிதாக கண்டுகொள்ளவில்லை. பெரிய அளவில் மீன் பிடிக்க மீனவர்கள் கடலுக்குள்ளும் செல்லவில்லை.

இது குறித்து நாகை மீனவர்கள் கூறுகையில், “இங்கு பிடிக்கப்படும் மீன்கள், இறால், நண்டு உள்ளிட்டவை ஐரோப்பா மற்றும் ஆசியாவின் பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தது. தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக சரக்கு போக்குவரத்தும் தடை செய்யப்பட்டுள்ளது. இதனால் மீன் பிடித்தாலும் ஏற்றுமதி செய்ய முடியாது. கடல் உணவுகளை கொண்டு செல்ல பழையபடி கார்கோ விமானங்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதன் மூலமாகவே மீனவர்களின் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்க முடியும்” என்றனர்.