×

தமிழகத்தில் தொடங்கவுள்ள பேருந்து போக்குவரத்து சேவை?

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக பொது போக்குவரத்து சேவை அனைத்தும் முடக்கப்பட்டுள்ளது. பேருந்துகள், ரயில்கள், விமான சேவை என அனைத்தும் மூடப்பட்டிருந்த நிலையில் பயணிகளின் நலன் கருதி ரயில் மற்றும் விமான சேவைகள் பகுதியளவு தொடங்கியுள்ளன. கடந்த 10ஆம் தேதி முதல் பேருந்து போக்குவரத்து இயங்காத நிலையில், 27 மாவட்டங்களில் பல தளர்வுகள் அளிக்கப்பட்டிருப்பதால் பேருந்து போக்குவரத்து சேவைக்கு அனுமதி வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் கொரோனா தொற்று குறைவாக உள்ள 27 மாவட்டங்களில்
 

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக பொது போக்குவரத்து சேவை அனைத்தும் முடக்கப்பட்டுள்ளது. பேருந்துகள், ரயில்கள், விமான சேவை என அனைத்தும் மூடப்பட்டிருந்த நிலையில் பயணிகளின் நலன் கருதி ரயில் மற்றும் விமான சேவைகள் பகுதியளவு தொடங்கியுள்ளன. கடந்த 10ஆம் தேதி முதல் பேருந்து போக்குவரத்து இயங்காத நிலையில், 27 மாவட்டங்களில் பல தளர்வுகள் அளிக்கப்பட்டிருப்பதால் பேருந்து போக்குவரத்து சேவைக்கு அனுமதி வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் கொரோனா தொற்று குறைவாக உள்ள 27 மாவட்டங்களில் நகர பேருந்துகள் மட்டும் இயக்க அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மாவட்டத்திற்குள் மட்டும் 50% பேருந்துகளை இயக்க முடிவு செய்துள்ள தமிழக அரசு, இந்த வார இறுதிக்குள் அதற்கான அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.