×

‘அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% இடஒதுக்கீடு வழங்கக்கூடாது’ ஆளுநருக்கு பாஜக கடிதம்!

மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு வழங்கக்கூடாது என ஆளுநருக்கு பாஜக கல்வி பிரிவு மாநில செயலாளர் கடிதம் எழுதியுள்ளார். இளங்கலை மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு வழங்கும் மசோதா, சட்டப்பேரவையில் நிறைவேறியது. அந்த சட்ட மசோதா இந்த ஆண்டு மாணவர் சேர்க்கையில் அமலாகுமா? என நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. அந்த வழக்கு விசாரணையின் போது, இட ஒதுக்கீடு மசோதா ஆளுநரின் பரிசீலனையில் இருக்கிறது என்றும் அதற்கு
 

மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு வழங்கக்கூடாது என ஆளுநருக்கு பாஜக கல்வி பிரிவு மாநில செயலாளர் கடிதம் எழுதியுள்ளார்.

இளங்கலை மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு வழங்கும் மசோதா, சட்டப்பேரவையில் நிறைவேறியது. அந்த சட்ட மசோதா இந்த ஆண்டு மாணவர் சேர்க்கையில் அமலாகுமா? என நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. அந்த வழக்கு விசாரணையின் போது, இட ஒதுக்கீடு மசோதா ஆளுநரின் பரிசீலனையில் இருக்கிறது என்றும் அதற்கு அவர் ஒப்புதல் அளிக்கும் வரை கலந்தாய்வு நடத்தப்படாது என்றும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அதனால் இந்த மசோதாவுக்கு ஆளுநர் விரைந்து ஒப்புதல் அளிக்க வேண்டும் என ஆளும் கட்சியினர் உட்பட பலரும் வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில், அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு வழங்கக்கூடாது என ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்கு பாஜகவின் கல்வி பிரிவு மாநில செயலாளர் நந்தகுமார் கடிதம் எழுதியிருக்கிறார். அரசு பள்ளி மாணவர்களின் மருத்துவக் கனவில் முட்டுக்கட்டை போடும் பாஜகவின் நடவடிக்கை எதிர்ப்பை கிளப்பியிருக்கிறது.