×

ஆட்சி கவிழ்ப்பில் ஈடுபடுகிறதா பாஜக? பாஜக தலைவர் முருகன் விளக்கம்

கந்த சஷ்டி கவசத்தை அவதூறு செய்த விவகாரத்தில் கருப்பர் கூட்டத்தின் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்பதனை விசாரிக்க வேண்டும் என்று பாஜக மாநில தலைவர் முருகன் வலியுறுத்தியுள்ளார். திருநெல்வேலியில் பாஜக நிர்வாகிகளுடனான ஆலோசனைக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “கந்தசஷ்டி கவசத்தை அவதூறு செய்து உலகத் தமிழர்களை அவமரியாதை செய்துள்ளனர். கந்த சஷ்டி கவசத்தை கொச்சைப்படுத்தி வெளியிட்ட கருப்பர் கூட்டத்தில் பின்னணியில் உள்ளது யார்? என்பதை விசாரிக்க வேண்டும். கந்த சஷ்டி கவசத்தை இழிவுப்படுத்திய நபர்களை இதுவரை
 

கந்த சஷ்டி கவசத்தை அவதூறு செய்த விவகாரத்தில் கருப்பர் கூட்டத்தின் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்பதனை விசாரிக்க வேண்டும் என்று பாஜக மாநில தலைவர் முருகன் வலியுறுத்தியுள்ளார்.

திருநெல்வேலியில் பாஜக நிர்வாகிகளுடனான ஆலோசனைக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “கந்தசஷ்டி கவசத்தை அவதூறு செய்து உலகத் தமிழர்களை அவமரியாதை செய்துள்ளனர். கந்த சஷ்டி கவசத்தை கொச்சைப்படுத்தி வெளியிட்ட கருப்பர் கூட்டத்தில் பின்னணியில் உள்ளது யார்? என்பதை விசாரிக்க வேண்டும். கந்த சஷ்டி கவசத்தை இழிவுப்படுத்திய நபர்களை இதுவரை ஸ்டாலின் கண்டிக்கவில்லை. தமிழக அரசு கந்த சஷ்டி கவசத்தில் சம்பந்தபட்ட அனைவரையும் கைது செய்து தேசிய பாதுகாப்பு மற்றும் குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த விவகாரத்தில் தமிழக அரசு ஒருசிலரை மட்டும் ஏன் கைது செய்துள்ளது? கருப்பர் கூட்டம் யூடியூப் சேனலை அரசு தடை செய்யவேண்டும்.

இந்த விவகாரத்தில் பாஜக அரசியல் செய்யவில்லை. அதிமுகவுடன் கருத்து வேறுபாடும் இல்லை. நான் மார்ச் மாதம் பாஜக மாநில தலைவராக பதவி ஏற்றதில் இருந்து கொரனா தடுப்பு நடவடிக்கைகளில் அரசுக்கு இணையாக செயல்பட்டு வருகிறோம். ஒரு கோடி நபர்களுக்கு கொரோனா காலத்தில் உணவு வழங்கியுள்ளோம். இந்தியாவில் எந்த மாநிலத்திலும் ஆட்சி கவிழ்ப்பு நடவடிக்கைகளில் பாஜக ஈடுபடவில்லை” என்று தெரிவித்தார்.