×

அரசின் தடையை மீறி பிக்பாஸ் சூட்டிங்! போலீஸ் அதிரடி

கொரோனா பரவல் எதிரொலியால் அரசு அறிவிக்கும் வரை சூட்டிங் நடத்த கூடாது என தயாரிப்பாளர் சங்கம் தெரிவித்துள்ளது. கொரோனா பரவல் குறைந்த பின், அரசு அனுமதித்தற்கு பின் சூட்டிங் பணிகள் தொடரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் சூட்டிங்கிற்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் ஈவிபி பிலிம் சிட்டியில் மட்டும் பிக்பாஸ் நிகழ்ச்சி சூட்டிங் நடந்து வருகிறது. இந்நிலையில் சென்னை பூந்தமல்லியில் ஈவிபி பிலிம் சிட்டியில் மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சிக்கான சூட்டிங் கடந்த சில நாட்களாக நடந்து வருகிறது.
 

கொரோனா பரவல் எதிரொலியால் அரசு அறிவிக்கும் வரை சூட்டிங் நடத்த கூடாது என தயாரிப்பாளர் சங்கம் தெரிவித்துள்ளது. கொரோனா பரவல் குறைந்த பின், அரசு அனுமதித்தற்கு பின் சூட்டிங் பணிகள் தொடரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் சூட்டிங்கிற்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் ஈவிபி பிலிம் சிட்டியில் மட்டும் பிக்பாஸ் நிகழ்ச்சி சூட்டிங் நடந்து வருகிறது.

இந்நிலையில் சென்னை பூந்தமல்லியில் ஈவிபி பிலிம் சிட்டியில் மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சிக்கான சூட்டிங் கடந்த சில நாட்களாக நடந்து வருகிறது. தமிழக அரசு தடை விதித்த பிறகும், தொடர்ந்து சூட்டிங் நடந்து வந்தது. இந்த சூட்டிங்கில் 150 பேர் கலந்து கொண்டு இடைவிடாது சூட்டிங் நடத்தி வந்தனர். அதில் 6 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. ஆனாலும் சூட்டிங் நிறுத்தப்படவில்லை. இது குறித்து தகவல் கிடைத்ததும், பூந்தமல்லி தாசில்தார், உதவி கமிஷனர் சுதர்சனம் ஆகியோர் பிலிம் சிட்டிக்குள் சென்று அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.