×

மாநில மனித உரிமை ஆணைய தலைவராக பாஸ்கரன் நியமனம்!

தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணைய தலைவராக பதவி வகித்து வந்தவர் மீனாகுமாரி. இவரது பதவிக்காலம் கடந்த டிச.25ம் தேதியோடு முடிவடைந்தது. இவர் ஒய்வு பெறுவதற்கு முன்னேரே, அந்த பதவிக்கு யாரை நியமிப்பது என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வந்தது. அப்போது, உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதியான பாஸ்கரன் பெயரை தமிழக அரசு பரிந்துரைத்தது. பாஸ்கரனை மனித உரிமை ஆணைய தலைவராக நியமிக்க தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஒப்புக் கொண்டார். இந்த நிலையில், ஒய்வுபெற்ற நீதிபதி
 

தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணைய தலைவராக பதவி வகித்து வந்தவர் மீனாகுமாரி. இவரது பதவிக்காலம் கடந்த டிச.25ம் தேதியோடு முடிவடைந்தது. இவர் ஒய்வு பெறுவதற்கு முன்னேரே, அந்த பதவிக்கு யாரை நியமிப்பது என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வந்தது. அப்போது, உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதியான பாஸ்கரன் பெயரை தமிழக அரசு பரிந்துரைத்தது. பாஸ்கரனை மனித உரிமை ஆணைய தலைவராக நியமிக்க தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஒப்புக் கொண்டார்.

இந்த நிலையில், ஒய்வுபெற்ற நீதிபதி பாஸ்கரனை தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணைய தலைவராக நியமித்து தலைமை செயலாளர் சண்முகம் உத்தரவு பிறப்பித்துள்ளார். அவர், அடுத்த 3 ஆண்டுகள் வரை மாநில மனித உரிமை ஆணைய தலைவராக பதவி வகிப்பார் என்று தெரிவித்துள்ளார்.