×

ஆஞ்சநேயருக்கு வடை மாலைக்கு பதிலாக வாழைப்பழ மாலை !

பூந்தமல்லியில் அமைந்துள்ள வீர ஆஞ்சநேயர் கோயிலில் புரட்டாசி மாதம் இரண்டாவது சனிக்கிழமைகளில் ஆண்டுதோறும் 10,008 வடமாலை சாற்றுவது வழக்கம். தற்போது கொரோனா பயத்தால் வடமாலை சாற்ற வாய்ப்பில்லை என்பதால் சுமார் ஒரு டன் பழங்களால் ஆன மாலை சாற்றப்படுள்ளது. அண்ணாசி, ஆப்பிள், மாதுளை, சாத்துக்குடி, வாழைப்பழம் உள்ளிட்ட பழங்களால் கோவில் கருவறை முதல் கோவில் மேல் பகுதி வரை பழங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. திராட்சை பழங்களைக் கொண்டு திராட்சை தோட்டம்போல் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. இரண்டு நாட்கள் கழித்து இந்த
 

பூந்தமல்லியில் அமைந்துள்ள வீர ஆஞ்சநேயர் கோயிலில் புரட்டாசி மாதம் இரண்டாவது சனிக்கிழமைகளில் ஆண்டுதோறும் 10,008 வடமாலை சாற்றுவது வழக்கம்.

தற்போது கொரோனா பயத்தால் வடமாலை சாற்ற வாய்ப்பில்லை என்பதால் சுமார் ஒரு டன் பழங்களால் ஆன மாலை சாற்றப்படுள்ளது.

அண்ணாசி, ஆப்பிள், மாதுளை, சாத்துக்குடி, வாழைப்பழம் உள்ளிட்ட பழங்களால் கோவில் கருவறை முதல் கோவில் மேல் பகுதி வரை பழங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

திராட்சை பழங்களைக் கொண்டு திராட்சை தோட்டம்போல் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. இரண்டு நாட்கள் கழித்து இந்த பழங்கள் அனைத்தும் பக்தர்களுக்கு கொடுக்கவும் திட்டமிட்டுள்ளனர்.