×

ஆபாசத்தை பரப்பும் விளம்பரங்களுக்கு தடை: நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

ஆபாசத்தை பரப்பும் வகையிலான விளம்பரங்களுக்கு இடைக்காலத் தடை விதித்து மதுரை உயர் நீதிமன்றக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்படும் விளம்பரங்களில் பல, ஆபாசத்தை பரப்பும் வகையிலேயே இருக்கிறது. குறிப்பாக உள்ளாடைகள், கருத்தடை சாதனம், வாசனை திரவியங்கள் உள்ளிட்ட விளம்பரங்கள் மோசமாக இருப்பதாக கடும் விமர்சனங்கள் எழுகின்றன. இந்த நிலையில், ஆபாசத்தை பரப்பும் வகையிலான விளம்பரங்களுக்கு தடை விதிக்க கோரி தொடரப்பட்ட வழக்கு இன்று மதுரை உயர்நீதி மன்றக்கிளையில் விசாரணைக்கு வந்தது. அப்போது ஆபாசத்தை பரப்பும் வகையிலான அனைத்து
 

ஆபாசத்தை பரப்பும் வகையிலான விளம்பரங்களுக்கு இடைக்காலத் தடை விதித்து மதுரை உயர் நீதிமன்றக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்படும் விளம்பரங்களில் பல, ஆபாசத்தை பரப்பும் வகையிலேயே இருக்கிறது. குறிப்பாக உள்ளாடைகள், கருத்தடை சாதனம், வாசனை திரவியங்கள் உள்ளிட்ட விளம்பரங்கள் மோசமாக இருப்பதாக கடும் விமர்சனங்கள் எழுகின்றன. இந்த நிலையில், ஆபாசத்தை பரப்பும் வகையிலான விளம்பரங்களுக்கு தடை விதிக்க கோரி தொடரப்பட்ட வழக்கு இன்று மதுரை உயர்நீதி மன்றக்கிளையில் விசாரணைக்கு வந்தது.

அப்போது ஆபாசத்தை பரப்பும் வகையிலான அனைத்து விளம்பரங்களுக்கும் இடைக்காலத் தடை விதித்து நீதிபதிகள் அதிரடி உத்தரவு பிறப்பித்தனர். உள்ளாடைகள், ஐஸ்கிரீம், வாசனை திரவியம், கருத்தடை சாதனம், பாலியல் பிரச்னை உள்ளிட்டவை தொடர்பான ஆபாச விளம்பரங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.