×

கொரோனா விழிப்புணர்வுக்காக விருது ஒருபுறம்; போலீசாரால் அபராதம் மறுபுறம் : வேதனையில் டீக்கடைக்காரர்!

திருப்பரங்குன்றம் அருகே சோளங்குருணி கிராமத்தைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவர் கொரோனா காலகட்டத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் மினி ஆம்னி வேனில் மைக் செட் கட்டி பிரச்சாரம் செய்துவந்தார். டீக்கடை நடத்திவரும் ரவிச்சந்திரனின் இந்த சேவையைப் பாராட்டி திருமங்கலம் காவல் துறையினர் அவருக்கு விருதும், சான்றிதழும் அளித்தனர். அதேசமயம் ரவிச்சந்திரனுக்கு கடந்த செப்டம்பர் மாதம் அவனியாபுரம் போக்குவரத்து காவல்துறையினர் விதிமீறலில் ஈடுபட்டதாக 600 ரூபாய் அபராத தொகைக்கான ரசீதை அனுப்பி உள்ளனர். சீட் பெல்ட் அணியாமல் விதிமுறையை
 

திருப்பரங்குன்றம் அருகே சோளங்குருணி கிராமத்தைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவர் கொரோனா காலகட்டத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் மினி ஆம்னி வேனில் மைக் செட் கட்டி பிரச்சாரம் செய்துவந்தார். டீக்கடை நடத்திவரும் ரவிச்சந்திரனின் இந்த சேவையைப் பாராட்டி திருமங்கலம் காவல் துறையினர் அவருக்கு விருதும், சான்றிதழும் அளித்தனர்.

அதேசமயம் ரவிச்சந்திரனுக்கு கடந்த செப்டம்பர் மாதம் அவனியாபுரம் போக்குவரத்து காவல்துறையினர் விதிமீறலில் ஈடுபட்டதாக 600 ரூபாய் அபராத தொகைக்கான ரசீதை அனுப்பி உள்ளனர். சீட் பெல்ட் அணியாமல் விதிமுறையை மீறி நான்கு சக்கர வாகனத்தில் வந்துள்ளார். அப்போது போலீசார் இவரை வண்டியை நிறுத்த சொல்லி நிறுத்தாமல் இவர் வந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் போக்குவரத்து காவல்துறை சார்பில் ரவிச்சந்திரனுக்கு 600 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

இது குறித்து கூறியுள்ள ரவிச்சந்திரன், கொரோனா காலகட்டத்தில் சொந்த செலவில் விழிப்புணர்வு செய்த எனக்கு அபராத தொகை அளித்து விதித்திருப்பது மனவேதனை அளிக்கிறது. ஒரு லட்சம் ரூபாய் பணம் செலவு செய்தும் கூட அபராதம் விதித்ததால் நஷ்டம் ஏற்பட்டது என்று கூறியுள்ளார்.