×

ஜவுளிக்கடையில் சானிடைசர் வழங்கும் தானியங்கி ரோபோ… மக்களிடையே வரவேற்பு!

கொரோனா தோற்று மூச்சு விடுவது மூலமாகக் கூட பரவலாம் என்று கூறப்படுகிறது. இதனால் சக மனிதர்களிடமிருந்தே சமூக விலகலைக் கடைபிடிக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகி விட்டோம். இதனால் தற்போது ரோபோக்களின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு மருந்துகள் வழங்குவது போன்ற மற்ற பணிகளுக்கு ரோபோட்கள் பயன்படுத்தப்படுவது மக்களிடையே வரவேற்பு பெற்று வருகிறது. தற்போது பல பெரிய வணிக நிறுவனங்களும் தங்கள் அலுவலகங்களில் ரோபோக்களை பயன்படுத்தி வருகின்றனர். ரோபோட்கள் சானிடைசேர் தெளிப்பது கிருமிநாசினி தெளிப்பது, சுத்தம் செய்வது,
 

கொரோனா தோற்று மூச்சு விடுவது மூலமாகக் கூட பரவலாம் என்று கூறப்படுகிறது. இதனால் சக மனிதர்களிடமிருந்தே சமூக விலகலைக் கடைபிடிக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகி விட்டோம். இதனால் தற்போது ரோபோக்களின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு மருந்துகள் வழங்குவது போன்ற மற்ற பணிகளுக்கு ரோபோட்கள் பயன்படுத்தப்படுவது மக்களிடையே வரவேற்பு பெற்று வருகிறது.

தற்போது பல பெரிய வணிக நிறுவனங்களும் தங்கள் அலுவலகங்களில் ரோபோக்களை பயன்படுத்தி வருகின்றனர். ரோபோட்கள் சானிடைசேர் தெளிப்பது கிருமிநாசினி தெளிப்பது, சுத்தம் செய்வது, பரிமாறுவது போன்ற செயல்களை செய்து வருகின்றனர். இந்தகொரோனா பெருந்தொற்று நேரத்தில் ட்ரோன்களின் பங்கு அளப்பரியது. ஆளில்லா ட்ரோன்கள் மூலம் கிருமிநாசினிகள் அனைத்துப் பகுதிகளிலும் தெளிக்கப்பட்டு வருகிறது.

தற்போது பிரபல ஜவுளிக்கடை ஒன்றில் சேலை அணிவிக்கப்பட்ட பெண் வடிவு கொண்ட தானியங்கி ரோபோட் ஒன்று வாடிக்கையாளர்களுக்கு சானிடைசர் வழங்கிவரும் வீடியோ வைரலாகி வருகிறது. மனிதர்களின் தொடர்பு இல்லாமல் ரோபோக்கள் மூலம் வேலை செய்வது கொரோனா பரவுவதைக் கட்டுப்படுத்தும் என்று கூறப்படுகிறது.