×

ஜெ. மரணம் தொடர்பான ஆறுமுகசாமி ஆணையத்துக்கு 8வது முறையாக அவகாசம் நீட்டிப்பு!

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக விசாரணை நடத்த அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி ஆணையத்தின் கால அவகாசத்தை மேலும் நான்கு மாதங்களுக்கு நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உடல் நலக் குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருடைய மரணத்தில் சந்தேகம் உள்ளதாக ஓ.பன்னீர்செல்வம் சர்ச்சையைக் கிளப்பினார். இது தொடர்பாக சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் கோரியிருந்தார். கடைசியில் அதிகாரமில்லாத ஆணையம் ஒன்றை அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டது. 2017ம் ஆண்டு
 

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக விசாரணை நடத்த அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி ஆணையத்தின் கால அவகாசத்தை மேலும் நான்கு மாதங்களுக்கு நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உடல் நலக் குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவருடைய மரணத்தில் சந்தேகம் உள்ளதாக ஓ.பன்னீர்செல்வம் சர்ச்சையைக் கிளப்பினார். இது தொடர்பாக சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் கோரியிருந்தார். கடைசியில் அதிகாரமில்லாத ஆணையம் ஒன்றை அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டது.

2017ம் ஆண்டு அமைக்கப்பட்ட இந்த ஆணையத்தில் பலரும் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர். புகார் கூறிய ஓ.பன்னீர்செல்வம் ஆஜராகாமல் உள்ளார். இந்த நிலையில் ஆணையத்தின் பதவிக்காலம் முடிய உள்ள நிலையில் மீண்டும் நான்கு மாத அவகாசம் கேட்டு நீதிபதி ஆறுமுகசாமி தமிழக அரசுக்கு கடிதம் எழுதியிருந்தார்.இதன் அடிப்படையில் எட்டாவது முறையாக நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்துக்கு கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.