×

நியாய விலைக் கடைகளில் வெளிநபர்கள் இருந்தால் கைது நடவடிக்கை : தமிழக அரசு அதிரடி உத்தரவு!

நியாயவிலைக் கடைகளில் பணியாளர்களைத் தவிர வெளி நபர்கள் யாரேனும் இருப்பது தெரியவந்தால் அவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூட்டுறவுத் துறை அதிரடி உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் இயங்கி வரும் நியாய விலைக்கடைகளில் பணியாளர்களை தவிர வெளிநபர்கள் கடைகளில் இருந்து கொண்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு தொல்லைகள் தருவதாக புகார்கள் எழுந்துள்ளன. இந்த சூழலில் தமிழக கூட்டுறவுத்துறை சங்க பதிவாளர் அனைத்து மண்டல பதிவாளர்களுக்கும் உத்தரவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் நியாயவிலை கடைகளில் சம்பந்தப்பட்ட பணியாளர்களைத் தவிர வெளிநபர்கள்
 

நியாயவிலைக் கடைகளில் பணியாளர்களைத் தவிர வெளி நபர்கள் யாரேனும் இருப்பது தெரியவந்தால் அவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூட்டுறவுத் துறை அதிரடி உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் இயங்கி வரும் நியாய விலைக்கடைகளில் பணியாளர்களை தவிர வெளிநபர்கள் கடைகளில் இருந்து கொண்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு தொல்லைகள் தருவதாக புகார்கள் எழுந்துள்ளன. இந்த சூழலில் தமிழக கூட்டுறவுத்துறை சங்க பதிவாளர் அனைத்து மண்டல பதிவாளர்களுக்கும் உத்தரவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.

அதில் நியாயவிலை கடைகளில் சம்பந்தப்பட்ட பணியாளர்களைத் தவிர வெளிநபர்கள் யாரும் இருக்கக் கூடாது. இதை மீதி இருந்தால் அவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும். ஒரே நியாய விலை கடைகளில் பணிபுரியும் பணியாளர்கள் தொடர்ந்து மூன்று ஆண்டுகளுக்கு மேல் அதே கடையில் பணிபுரியும் அனுமதிக்கக்கூடாது. அவ்வாறு மூன்றாண்டுகளுக்கும் மேலாக பணியாளர்கள் ஒரே கடையில் பணி புரிந்து கொண்டிருந்தால், அவர்கள் உடனடியாக அருகில் உள்ள நியாய விலைக்கடைகள் மாற்றப்பட வேண்டும்.


நியாயவிலை கடைகளில் வெளி நபர்கள் இருப்பது தெரியவந்தால் இதுகுறித்து காவல் துறை அல்லது குடிமைப்பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்துவிட்டு குற்றவியல் நடவடிக்கை எடுத்துக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது