×

சொந்தவூருக்கு எடுத்துவரப்பட்ட உயிரிழந்த ராணுவ வீரரின் உடல்! கொட்டு மழையில் அஞ்சலி செலுத்திய மக்கள்!!

ரஜோரி மாவட்டத்தின் சந்தெர்பானி எல்லைப்பகுதியில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி, பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கிச்சூடு நடத்தியது. இதற்கு இந்தியா பதிலடி கொடுத்தது. இந்த துப்பாக்கிச்சூட்டில் சேலத்தை சேர்ந்த மதியழகன் படுகாயம் அடைந்தார். உடனடியாக அவர் ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். மதியழகன் சேலம்மாவட்டம் எடப்பாடி தாலுகாவில் உள்ள ஸ்ரீரங்காய் காடு என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் ஆவார். பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலில் உயிரிழந்த சேலம் எடப்பாடியை சேர்ந்த ராணுவ வீரர் மதியழகன்
 

ரஜோரி மாவட்டத்தின் சந்தெர்பானி எல்லைப்பகுதியில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி, பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கிச்சூடு நடத்தியது. இதற்கு இந்தியா பதிலடி கொடுத்தது. இந்த துப்பாக்கிச்சூட்டில் சேலத்தை சேர்ந்த மதியழகன் படுகாயம் அடைந்தார். உடனடியாக அவர் ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். மதியழகன் சேலம்மாவட்டம் எடப்பாடி தாலுகாவில் உள்ள ஸ்ரீரங்காய் காடு என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் ஆவார்.

பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலில் உயிரிழந்த சேலம் எடப்பாடியை சேர்ந்த ராணுவ வீரர் மதியழகன் சடலம் தனி விமானம் மூலம் கோவை சூலூர் விமானப்படை தளத்திற்கு கொண்டு வரப்பட்டு, அங்கிருந்து சாலை மார்க்கமாக சேலம் எடப்பாடிக்கு எடுத்துச் செல்லப்பட்டது. ராணுவ வீரர் மதியழகன் சொந்த ஊரான சித்தூரில் அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்டுள்ளது. அங்கு கனமழை பெய்து வரும் நிலையில், கொட்டுமழையில் நாட்டுக்காக உயிர்நீத்த மதியழகனுக்கு ஏராளமானோர் அஞ்சலி செலுத்துவருகின்றனர்.