×

ஆயுதப்படை காவலர் தூக்கிட்டு தற்கொலை: கடன் தொல்லை காரணமா?

சேலம் அருகே ஆயுதப்படை காவலர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் மேட்டூரில் வசித்து வந்தவர் பாலாஜி (32). இவர் கடந்த 7 ஆண்டுகளாக ஆயுதப்படை காவலராக பணியாற்றி வந்தார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் பாலாஜிக்கும் நந்தினி என்ற பெண்ணுக்கும் திருமணம் நடந்துள்ளது. குழந்தை இல்லாததால் பாலாஜி வேதனையில் இருந்ததாக தெரிகிறது. இதனிடையே, அவருக்கு குடிப்பழக்கமும் ஏற்பட்டுள்ளது. சேலம் குமார சாமிப்பட்டி ஆயுதப்படை குடியிருப்பில் மனைவியுடன் வசித்து வந்த பாலாஜி,
 

சேலம் அருகே ஆயுதப்படை காவலர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம் மேட்டூரில் வசித்து வந்தவர் பாலாஜி (32). இவர் கடந்த 7 ஆண்டுகளாக ஆயுதப்படை காவலராக பணியாற்றி வந்தார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் பாலாஜிக்கும் நந்தினி என்ற பெண்ணுக்கும் திருமணம் நடந்துள்ளது. குழந்தை இல்லாததால் பாலாஜி வேதனையில் இருந்ததாக தெரிகிறது. இதனிடையே, அவருக்கு குடிப்பழக்கமும் ஏற்பட்டுள்ளது.

சேலம் குமார சாமிப்பட்டி ஆயுதப்படை குடியிருப்பில் மனைவியுடன் வசித்து வந்த பாலாஜி, இன்று காலை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். அவரின் அறை வெகுநேரமாக திறக்கப்படாததால் சந்தேகமடைந்த நந்தினி, அவர் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்து போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார். தகவல் அறிந்து வந்த போலீசார், பாலாஜியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக போலீசார் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில், பாலாஜி சிலரிடம் கடன் வாங்கி இருந்ததாக தெரிய வந்துள்ளது. கடன் தொல்லையால் அவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது குழந்தை இல்லாததால் தற்கொலை செய்து கொண்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.