×

கிசான் திட்ட முறைகேடு: சேலத்தில் தண்டோரா மூலம் அறிவிப்பு!

கிசான் திட்டத்தில் முறைகேடு செய்தவர்கள் பணத்தை திருப்பி செலுத்த வேண்டும் என சேலத்தில் தண்டோரா மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு உதவும் பொருட்டு துவக்கப்பட்ட பிரதமரின் கிசான் திட்டத்தில் தமிழகத்தின் பல மாவட்டங்களில் முறைகேடு நடந்திருப்பது அம்பலமானது. லட்சக்கணக்கில் பணம் கையாடல் நடந்துள்ளதை அறிந்த அரசு, முறைகேடு செய்தவர்களின் வங்கி கணக்கில் இருந்து பணத்தை திரும்பப்பெறுமாறு அரசு உத்தரவிட்டது. அதன் படி, எல்லா மாவட்ட ஆட்சியர்களும் பணத்தை மீட்டெடுக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அதுமட்டுமில்லாமல், இதுவரை கிட்டத்தட்ட
 

கிசான் திட்டத்தில் முறைகேடு செய்தவர்கள் பணத்தை திருப்பி செலுத்த வேண்டும் என சேலத்தில் தண்டோரா மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

விவசாயிகளுக்கு உதவும் பொருட்டு துவக்கப்பட்ட பிரதமரின் கிசான் திட்டத்தில் தமிழகத்தின் பல மாவட்டங்களில் முறைகேடு நடந்திருப்பது அம்பலமானது. லட்சக்கணக்கில் பணம் கையாடல் நடந்துள்ளதை அறிந்த அரசு, முறைகேடு செய்தவர்களின் வங்கி கணக்கில் இருந்து பணத்தை திரும்பப்பெறுமாறு அரசு உத்தரவிட்டது. அதன் படி, எல்லா மாவட்ட ஆட்சியர்களும் பணத்தை மீட்டெடுக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அதுமட்டுமில்லாமல், இதுவரை கிட்டத்தட்ட 40 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இதனிடையே முறைகேட்டில் ஈடுபட்ட 80 அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதாகவும் முறைகேடு செய்தவர்கள் யாராக இருந்தாலும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என வேளாண்துறை செயலாளர் ககன் தீப் சிங் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் சேலம் அருகே கிசான் திட்டத்தில் முறைகேடாக பணம் பெற்றவர்கள் திருப்பி செலுத்த தண்டோரா மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. செப்.14 ஆம் தேதி மாலைக்குள் பணத்தை செலுத்தி உரிய ஆவணம் பெறவேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.