×

“உங்க ஆட்சில மட்டும் அணிலால் மின்தடை ஏற்படுவது ஏன்?” – அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு அண்ணாமலை கேள்வி

கரூர் மாவட்ட பாஜக சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி வி.வி.செந்தில்நாதன் தலைமையில் கரூர் வெங்கமேடு தனியார் திருமண மண்டபத்தில் இன்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக பாஜக மாநில துணைத் தலைவர் அண்ணாமலை கலந்துகொண்டார். நலத்திட்ட உதவிகளை வழங்கிய பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சியில் மின் உபரி மாநிலமாக தமிழகம் இருந்து வந்திருக்கிறது. தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக மின்தடை ஏற்படுவது ஏன்? அதற்கு அணில் காரணமாகக்
 

கரூர் மாவட்ட பாஜக சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி வி.வி.செந்தில்நாதன் தலைமையில் கரூர் வெங்கமேடு தனியார் திருமண மண்டபத்தில் இன்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக பாஜக மாநில துணைத் தலைவர் அண்ணாமலை கலந்துகொண்டார். நலத்திட்ட உதவிகளை வழங்கிய பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சியில் மின் உபரி மாநிலமாக தமிழகம் இருந்து வந்திருக்கிறது.

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக மின்தடை ஏற்படுவது ஏன்? அதற்கு அணில் காரணமாகக் கூறப்படுகிறது. இந்தியா உருவாவதற்கு முன்பிருந்தே அணிகல்கள் இருக்கின்றன. 2011-2021ஆம் ஆண்டு வரை அணில்கள் இருந்துள்ளன. அப்படி இருந்த அணில்கள் திமுக ஆட்சியில் மட்டும் மின்தடை ஏற்படுத்துவது ஏன்? அமைச்சரின் விளக்கத்தை ஏற்றுக்கொள்ள முடியாது. அவர் உடனடியாக தலையிட்டு என்ன பிரச்சினை என்பதை ஆராய வேண்டும். அதற்குரிய தீர்வைக் காண வேண்டும்.

இதனால் மக்கள் துளியும் பாதிக்கப்பட கூடாது. இந்த மின்வெட்டை இப்போதே மக்கள் திமுக அரசின் ட்ரெய்லர் எனக் கூற ஆரம்பித்துவிட்டனர். பொறுமையாக இருங்கள் அரசை விமர்சிக்க 6 மாத கால அவகாசம் அளிப்போம். பெட்ரோல், டீசல் விலையில் மாநில அரசுக்கு ரூ.37 முதல் ரூ.39 வரை வரி வருவாய் கிடைக்கிறது. எனவே மாநில அரசும் ரூ.5 முதல் ரூ.7 வரை விலையைக் குறைக்கலாம்” என்றார்.