×

அண்ணா யாரு.. ’தளபதி’-விஜய் ரசிகர்கள் அதகளம்

ரசிகர்கள் தங்களுக்குப் பிடித்த நடிகர்களை ‘தலைவா’ என்று அழைப்பது வழக்கம்தான் என்றாலும் இளையதளபதி விஜய்யை அவரது ரசிகர்கள் ‘தலைவா’ என்று பல காலமாக அழைத்து வருவது அரசியல் உள்நோக்கத்துடன்தான். விஜய்யின் ஒவ்வொரு பிறந்த நாளின் போதும் போஸ்டர் ஒட்டும் அவரது ரசிகர்கள் தலைவா தலைமை ஏற்க வா என்ற வாசகங்களுடன் போஸ்டர் அடித்து வருகின்றனர். விஜய் அரசியலுக்கு வரவேண்டும் என்று அவரது ரசிகர்கள் தொடர்ந்து போஸ்டர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதற்கு விஜய் எந்த எதிர்ப்பும் காட்டாதபோதே
 

ரசிகர்கள் தங்களுக்குப் பிடித்த நடிகர்களை ‘தலைவா’ என்று அழைப்பது வழக்கம்தான் என்றாலும் இளையதளபதி விஜய்யை அவரது ரசிகர்கள் ‘தலைவா’ என்று பல காலமாக அழைத்து வருவது அரசியல் உள்நோக்கத்துடன்தான். விஜய்யின் ஒவ்வொரு பிறந்த நாளின் போதும் போஸ்டர் ஒட்டும் அவரது ரசிகர்கள் தலைவா தலைமை ஏற்க வா என்ற வாசகங்களுடன் போஸ்டர் அடித்து வருகின்றனர்.

விஜய் அரசியலுக்கு வரவேண்டும் என்று அவரது ரசிகர்கள் தொடர்ந்து போஸ்டர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதற்கு விஜய் எந்த எதிர்ப்பும் காட்டாதபோதே அவர் இதை விரும்புகிறார். அவருக்கும் அந்த நாற்காலி கனவுகள் இருக்கத்தான் செய்கின்றன என்று தெரிகிறது.

எம்ஜிஆரின் உருவத்தில் விஜய்யை சித்தரித்து ஒட்டிய போஸ்டர்கள் சலசலப்பை ஏற்படுத்தியன. எம்ஜிஆர் ஜெயலலிதா உருவங்களில் விஜய் -சங்கீதா படங்களை சித்தரித்து ஒட்டப்பட்ட போஸ்டர்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியன. தொடர்ந்து எம்ஜிஆர் உருவங்களில் விஜய் போஸ்டர் ஒட்டப்பட்டு வந்ததால், எல்லோரும் எம்ஜிஆர் ஆக முடியாது என்ற கடும் கண்டனம் எழுந்தது.

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலுக்கு பின்னர் இந்த போஸ்டர் போராட்டங்களுக்கு கொஞ்சம் ஓய்வு விடுத்திருந்தனர் விஜய் ரசிகர்கள் . தற்போது, புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு மீண்டும் தங்கள் போஸ்டர் ஆயுதத்தை கையில் எடுத்திருக்கின்றனர்.

இந்த ஒன்பது மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தலில் விஜய் தனது மக்கள் இயக்கத்தைச் சேர்ந்தவர்களை போட்டியிட அனுமதி அளித்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கும் நிலையில், ரசிகர்கள் கூடுதல் உற்சாகத்தில் இருக்கின்றனர். அதனால், ‘ 2021ல் உள்ளாட்சியில் வரோம் 2026ல் நல்லாட்சி தரோம்’ என்று மதுரை முழுவதும் ரசிகர்கள் போஸ்டர் ஒட்டி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கின்றனர்.

எம்ஜிஆர் உருவங்களில் போஸ்டர் ஒட்டி வந்த விஜய் ரசிகர்கள், இப்போது மறைந்த முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணா உருவத்திலும் விஜய்யை சித்தரித்து போஸ்டர் ஒட்டி இருக்கின்றனர். ‘ நாட்டிற்காக உழைப்பதற்கு அண்ணா பிறந்தார் பொது நலத்தில் தானே நாள் முழுக்க கண்ணாய் இருந்தார்’ என்று அண்ணாவைப் பற்றி எம். ஜி ஆர் பாடிய பாடல் வரிகளை போஸ்டரில் அச்சடித்து, எங்கள் கடன் தீர மீண்டும் அண்ணா.. தமிழர் நீங்கள் வேண்டும் அண்ணா என்ற வாசகங்களை பெரிதாக அச்சிட்டு அதற்கு கீழே, ‘ அண்ணா யாரு தளபதி என்று மதுரை தெற்கு மாவட்ட தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் போஸ்டர் ஒட்டப்பட்டு இருக்கின்றன.