×

அரியர் தேர்வுகளுக்கான முடிவுகளை வெளியிட்டது அண்ணா பல்கலைக்கழகம்!

பொறியியல் மாணவர்களுக்கான நவம்பர், டிசம்பர் செமஸ்டர் தேர்வுகள் கொரோனா பரவல் காரணமாக கடந்த பிப்ரவரி, மார்ச் மாதங்களில் அண்ணா பல்கலைக்கழகம் இணைய வழியாக நடத்தியது. பிஇ, பிடெக், மற்றும் எம்இ, எம்டெக் படிப்புகளில் முதலாம் ஆண்டை தவிர்த்து மற்ற மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் கடந்த ஏப்ரல் 11ஆம் தேதி வெளியானது. இதில் பல்வேறு முறைகேடுகள் உள்ளதாகப் புகார்கள் எழுந்ததையடுத்து தேர்வுகள் மீண்டும் நடத்தப்படும் என்று உயர் கல்வித்துறை அறிவித்துள்ளது. இந்நிலையில் அரியர் மற்றும் முதலாம் ஆண்டு மாணவர்கள்
 

பொறியியல் மாணவர்களுக்கான நவம்பர், டிசம்பர் செமஸ்டர் தேர்வுகள் கொரோனா பரவல் காரணமாக கடந்த பிப்ரவரி, மார்ச் மாதங்களில் அண்ணா பல்கலைக்கழகம் இணைய வழியாக நடத்தியது. பிஇ, பிடெக், மற்றும் எம்இ, எம்டெக் படிப்புகளில் முதலாம் ஆண்டை தவிர்த்து மற்ற மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் கடந்த ஏப்ரல் 11ஆம் தேதி வெளியானது.

இதில் பல்வேறு முறைகேடுகள் உள்ளதாகப் புகார்கள் எழுந்ததையடுத்து தேர்வுகள் மீண்டும் நடத்தப்படும் என்று உயர் கல்வித்துறை அறிவித்துள்ளது. இந்நிலையில் அரியர் மற்றும் முதலாம் ஆண்டு மாணவர்கள் எழுதிய தேர்வுகளுக்கான முடிவுகளை அண்ணா பல்கலைக்கழகம் தற்போது வெளியிட்டுள்ளது. தேர்வு முடிவுகளை ttps://aucoe.annauniv.edu/regular_result_nd2020/index.php என்ற அண்ணா பல்கலைக்கழகத்தின் இணைய பக்கத்தில் காணுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.