×

தொழில்நுட்பக் காரணங்களால் இறுதி செமஸ்டர் தேர்வை எழுத முடியாத மாணவர்களுக்கு அண்ணா பல்கலை புது அறிவிப்பு!

கொரோனா காரணமாக தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகள் கடந்த 7 மாதங்களுக்கு மேலாக மூடப்பட்டுள்ளன. இருப்பினும் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதையடுத்து இளநிலை முதலாம், இரண்டாம் ஆண்டு, பிஇ உள்ளிட்ட கல்லூரி மாணவர்களுக்கு பருவ தேர்வு ரத்து செய்யப்பட்டது. இருப்பினும் இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்களின் செமஸ்டர் தேர்வு ரத்து செய்ய யுஜிசி ஒப்புதல் அளிக்கவில்லை. இதனால் கடந்த செப்டம்பர் இறுதியில், மாநிலம் உள்ள பொறியியல் இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கு
 

கொரோனா காரணமாக தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகள் கடந்த 7 மாதங்களுக்கு மேலாக மூடப்பட்டுள்ளன. இருப்பினும் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதையடுத்து இளநிலை முதலாம், இரண்டாம் ஆண்டு, பிஇ உள்ளிட்ட கல்லூரி மாணவர்களுக்கு பருவ தேர்வு ரத்து செய்யப்பட்டது. இருப்பினும் இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்களின் செமஸ்டர் தேர்வு ரத்து செய்ய யுஜிசி ஒப்புதல் அளிக்கவில்லை.

இதனால் கடந்த செப்டம்பர் இறுதியில், மாநிலம் உள்ள பொறியியல் இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வு ஆன்லைனில் நடைபெற்றது. தேர்வை இணையதளக் கோளாறு, தொழில்நுட்பக் காரணங்களால் பலர் எழுதாமல் போன நிலையில், அவர்களுக்கான மறு தேர்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி வரும் 17 முதல் 21-ம் தேதி வரை ஆன்லைனில் மறுத்தேர்வு நடைபெறும் நடைபெறும் என்றும் தேர்வுக்கான விரிவான கால அட்டவணை விரைவில் வெளியிடப்படும் என்றும் அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.