×

முதல்வர் பழனிசாமியுடன் அன்புமணி ராமதாஸ் சந்திப்பு!

வன்னியர்களுக்கு 20 சதவிகித இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக முதல்வர் பழனிசாமியை சந்தித்தார் பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ். கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 20% இட ஒதுக்கீடு வழங்கக்கோரி பாமகவினரும், வன்னியர் சங்கத்தினரும் இன்று காலை சென்னை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய அலுவகம் எதிரே ஆர்ப்பாட்டம் நடத்த முடிவெடுத்தனர். போராட்டத்தில் பங்கேற்க வந்த பாமகவினரை, போலீசார் ஆங்காங்கே தடுத்து நிறுத்தினர். இதனால் ஆத்திரமடைந்த பாமகவினர், சாலை மறியல் செய்ததோடு ரயில்களை வழி மறித்து அதன்
 

வன்னியர்களுக்கு 20 சதவிகித இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக முதல்வர் பழனிசாமியை சந்தித்தார் பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ்.

கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 20% இட ஒதுக்கீடு வழங்கக்கோரி பாமகவினரும், வன்னியர் சங்கத்தினரும் இன்று காலை சென்னை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய அலுவகம் எதிரே ஆர்ப்பாட்டம் நடத்த முடிவெடுத்தனர். போராட்டத்தில் பங்கேற்க வந்த பாமகவினரை, போலீசார் ஆங்காங்கே தடுத்து நிறுத்தினர். இதனால் ஆத்திரமடைந்த பாமகவினர், சாலை மறியல் செய்ததோடு ரயில்களை வழி மறித்து அதன் மீது கற்களை வீசி எறிந்ததால் பெரும் பரபரப்பு நிலவியது.

இந்த நிலையில் சென்னை தலைமை செயலகத்தில் பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ், முதல்வர் பழனிசாமியை சந்தித்து பேசினார். அப்போது, வன்னியர்களுக்கு 20% இட இதுக்கீடு வழங்குவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அன்புமணி ராமதாஸுடன் பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி, ஏ.கே.மூர்த்தி உள்ளிட்டோரும் சென்றிருந்தனர்.