×

டெல்லி புறப்பட்டார் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா!

2 நாட்கள் அரசு முறை பயணமாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, நேற்று மாலை 3 மணிக்கு சென்னை விமான நிலையம் வந்தடைந்தார். பாஜகவுடன் கூட்டணியில் இருக்கும் ஆளும் அரசான அதிமுக, அமித்ஷாவுக்கு உற்சாக வரவேற்பு அளித்தது. அவரை தங்க வைப்பதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட லீலா பேலஸுக்கு செல்லும் வழியில் நூற்றுக் கணக்கான தொண்டர்கள், ஆவலுடன் காத்துக்கிடந்தனர். அவர்களை பார்த்து உற்சாகம் அடைந்த அமித்ஷா காரில் இருந்து இறங்கி சாலையில் நடந்து சென்றார். வழக்கம் போலவே, அமித்ஷாவுக்கு
 

2 நாட்கள் அரசு முறை பயணமாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, நேற்று மாலை 3 மணிக்கு சென்னை விமான நிலையம் வந்தடைந்தார். பாஜகவுடன் கூட்டணியில் இருக்கும் ஆளும் அரசான அதிமுக, அமித்ஷாவுக்கு உற்சாக வரவேற்பு அளித்தது. அவரை தங்க வைப்பதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட லீலா பேலஸுக்கு செல்லும் வழியில் நூற்றுக் கணக்கான தொண்டர்கள், ஆவலுடன் காத்துக்கிடந்தனர். அவர்களை பார்த்து உற்சாகம் அடைந்த அமித்ஷா காரில் இருந்து இறங்கி சாலையில் நடந்து சென்றார். வழக்கம் போலவே, அமித்ஷாவுக்கு எதிரான மக்கள் #gobackamitshah என்ற ஹேஸ்டேக்கை இந்திய அளவில் ட்ரெண்டாக்கினர்.

இதை தொடர்ந்து அரசு விழாவில் பங்கேற்ற அமித்ஷா, ரூ.67,378 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டப்பணிகளை தொடக்கி வைத்த பிறகு, பாஜக சார்பில் நடத்தப்பட்ட மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பங்கேற்றார். பின்னர் இரவு லீலா பேலஸுக்கு திரும்பிய அவர், குருமூர்த்தியுடன் 3 மணி நேரத்துக்கு மேலாக ஆலோசனை நடத்தினார்.

இன்று காலை அமித்ஷா ஆர்.எஸ்.எஸ் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தியதை தொடர்ந்து, உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகனை சந்தித்தார். அப்போது மத்திய அரசுக்கும் தமிழக அரசுக்கும் இடையே நீடிக்கும் கல்வி பிரச்னைகள் தொடர்பாக விவாதிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியானது. இந்த நிலையில், 2 நாட்கள் பயணத்தை முடித்த அமித்ஷா சென்னையில் இருந்து டெல்லி புறப்பட்டு சென்றார்.