×

“கட்சி ஆரம்பிக்கலன்னா பரவால்ல; ஆதரவு கொடுங்க பாஸு” – சென்னை வரும் அமித் ஷாவின் அடுத்த மூவ்!

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வரும் 14-ம் தேதி சென்னை வர திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஜனவரி 14ஆம் தேதி மீண்டும் சென்னை வருகிறார். துக்ளக் ஆண்டு விழாவில் பங்கேற்பதற்காக அமித் ஷா சென்னை வருகிறார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முதல்வர் வேட்பாளர் தொடர்பாக அதிமுக – பாஜக இடையே பிரச்சினை உள்ள நிலையில் அமைச்சர் அமித் ஷா வருகையின் போது அதிமுக – பாஜக இடையே தொகுதி
 

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வரும் 14-ம் தேதி சென்னை வர திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஜனவரி 14ஆம் தேதி மீண்டும் சென்னை வருகிறார். துக்ளக் ஆண்டு விழாவில் பங்கேற்பதற்காக அமித் ஷா சென்னை வருகிறார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முதல்வர் வேட்பாளர் தொடர்பாக அதிமுக – பாஜக இடையே பிரச்சினை உள்ள நிலையில் அமைச்சர் அமித் ஷா வருகையின் போது அதிமுக – பாஜக இடையே தொகுதி உடன்பாடு இறுதியாக வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. ஏற்கனவே நவம்பரில் அமிர்ஷா சென்னை வந்தபோது பாஜகவுடன் அதிமுக கூட்டணி என அறிவிக்கப்பட்டது.

இதுவொருபுறமிருக்க சென்னை வருகையின்போது ரஜினியை சந்தித்து அவரது உடல் நலம் பற்றி அமித் ஷா விசாரிக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது. கட்சி தொடங்கவில்லை என அறிவித்த நிலையில் ரஜினியின் ஆதரவையும் அமித் ஷா கேட்க வாய்ப்புள்ளது என்றும் கூறப்படுகிறது.

கட்சி தொடங்கி சட்டமன்ற தேர்தலில் போட்டியிட நினைத்திருந்த நடிகர் ரஜினிகாந்த் உடல்நல குறைவால் அரசியலுக்கு வர போவதில்லை என்று அறிவித்தார். இந்த அறிவிப்பு அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆரம்பத்தில் இருந்தே பாஜகவின் திட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்த ரஜினி கட்சி ஆரம்பித்தால் நிச்சயம் பாஜகவுடன் கூட்டணி அமைப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அந்த கட்சியின் தலைமைக்கு ரஜினியின் அறிவிப்பு [ பெரும் ஏமாற்றத்தை கொடுத்துள்ளது. இந்த சூழலில் தமிழகம் வரும் அமித்ஷா நிச்சயம் ரஜினியின் ஆதரவை கோருவார் என்பது அரசியல் நோக்கர்களின் கருத்தாக உள்ளது.