×

கொரோனாவின் கோரத்தாண்டவம்…22 வயதான ஆம்புலன்ஸ் உதவியாளர் மரணம்!

கொரோனா வைரஸ் பாதிப்பு தமிழகத்தை உலுக்கி எடுத்து வருகிறது. நாள் தோறும் நூற்றுக் கணக்கான மக்கள் இந்த கொடிய வகை வைரசால் உயிரிழந்து வரும் நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கையில் ஈடுபடுபவர்கள் உயிரிழப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. அந்த வகையில் கொரோனா நோயாளிகளை ஆம்புலன்ஸில் ஏற்றிச் சென்ற 22 வயதான இளைஞர் உயிரிழந்துள்ளார். திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த 22 வயதான அந்த இளைஞர், மங்களம் பகுதியில் ஆம்புலன்ஸ் உதவியாளராக பணியாற்றி வந்ததால் அவருக்கு கொரோனா தொற்று பரவியுள்ளது.
 

கொரோனா வைரஸ் பாதிப்பு தமிழகத்தை உலுக்கி எடுத்து வருகிறது. நாள் தோறும் நூற்றுக் கணக்கான மக்கள் இந்த கொடிய வகை வைரசால் உயிரிழந்து வரும் நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கையில் ஈடுபடுபவர்கள் உயிரிழப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. அந்த வகையில் கொரோனா நோயாளிகளை ஆம்புலன்ஸில் ஏற்றிச் சென்ற 22 வயதான இளைஞர் உயிரிழந்துள்ளார்.

திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த 22 வயதான அந்த இளைஞர், மங்களம் பகுதியில் ஆம்புலன்ஸ் உதவியாளராக பணியாற்றி வந்ததால் அவருக்கு கொரோனா தொற்று பரவியுள்ளது. அதனால் இவர் கடந்த 4 நாட்களுக்கு முன்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையிலும், சிகிச்சை பலன் இன்றி கோவை, இஎஸ்ஐ மருத்துவமனையில் அவர் உயிரிழந்துள்ளார். இவரது மறைவு அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. திண்டுகல்லில் கொரோனாவால் ஏற்பட்ட முதல் உயிரிழப்பு இதுவே என்பது குறிப்பிடத்தக்கது.