×

பக்தர்கள் இன்றி எளிமையாக நடந்த அழகர்கோவில் ஆடி அமாவாசை திருவிழா!

மதுரை மாவட்டம் அழகர்கோவிலில் ஆடி அமாவாசையை முன்னிட்டு கள்ளழகர் கருட வாகனத்தில் எழுந்தருளுதல் மற்றும் பதினெட்டாம் படி கருப்பண்ணசாமிக்கு சந்தனம் சாத்துதல் விழா மிக எளிமையாக நடந்தது. கொரோனா காரணமாக கோவில்களுக்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுவதில்லை. இதனால் இந்த ஆண்டு உலகப் புகழ் பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோவில் திருவிழா பக்தர்கள் அனுமதியின்றி கொண்டாடப்பட்டது. தற்போது ஆடி அமாவாசையை ஒட்டி அழகர்கோவிலில் கள்ளழகர் கருட வாகனத்தில் எழுந்தருளி, காவல் செய்வமாக இருக்கும் பதினெட்டாம்படி கருப்பண்ண சாமி கதவுக்கு சந்தனம்
 

மதுரை மாவட்டம் அழகர்கோவிலில் ஆடி அமாவாசையை முன்னிட்டு கள்ளழகர் கருட வாகனத்தில் எழுந்தருளுதல் மற்றும் பதினெட்டாம் படி கருப்பண்ணசாமிக்கு சந்தனம் சாத்துதல் விழா மிக எளிமையாக நடந்தது.

கொரோனா காரணமாக கோவில்களுக்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுவதில்லை. இதனால் இந்த ஆண்டு உலகப் புகழ் பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோவில் திருவிழா பக்தர்கள் அனுமதியின்றி கொண்டாடப்பட்டது. தற்போது ஆடி அமாவாசையை ஒட்டி அழகர்கோவிலில் கள்ளழகர் கருட வாகனத்தில் எழுந்தருளி, காவல் செய்வமாக இருக்கும் பதினெட்டாம்படி கருப்பண்ண சாமி கதவுக்கு சந்தனம் சாத்தும் நிகழ்ச்சி பக்தர்கள் இன்றி கொண்டாடப்பட்டது.

வழக்கமாக மதுரை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக் கணக்கான பக்தர்கள் சாமிக்கு சந்தனக்குடம் எடுத்து வந்து சாமி தரிசனம் செய்து மிகவும் விமரிசையாக விழாவைக் கொண்டாடுவது வழக்கம்.
ஆனால் இந்த ஆண்டு கோவில் பட்டர்கள், நிர்வாகிகள் மட்டும் பங்கேற்று விழாவை நடத்தினார்கள். அதே நேரத்தில் வழக்கமான வழிபாட்டு முறைக்கு எந்த குறைவும் இன்றி விமரிசையாக ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. கள்ளழகர் உட்பிரகாரத்தில் கருட வாகனத்தில் எழுந்தருளினார். அவருக்கு சிறப்பு அலங்காரம், ஆராதனை செய்யப்பட்டது. பின்னர், பதினெட்டாம்படி கருப்பண்ணசாமி கதவுக்கு சந்தனம் சாத்தப்பட்டது. கதவுக்கு மாலை அணிவிக்கப்பட்டு தீபாரதனை காட்டப்பட்டது.