×

கொரோனா பாதித்த அதிமுக எம்.எல்.ஏ. அம்மன் அர்ஜூனன் குணமடைந்தார்!

கோவை தெற்கு எம்எல்ஏ அம்மன் அர்ஜூனன் மற்றும் அவரது மகள் மருமகன், பேத்தி ஆகிய நால்வரும் கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் இருந்து கொரோனா சிகிச்சைக்கு பின் குணமடைந்து வீடு திரும்பினர். மதுரையில் இருந்து கோவை வந்த எம்எல்ஏ அம்மன் அர்ஜூனனின் மகள், மருகன், பேத்தி ஆகியோருக்கு கடந்த 30 ஆம் தேதி கொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து அனைவரும்கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதனை தொடர்ந்து எம்எல்ஏ அம்மன் அர்ஜூனனுக்கும் தொற்று உறுதியானதால் கடந்த ஞாயிற்றுக்கிழமை இஎஸ்ஐ
 

கோவை தெற்கு எம்எல்ஏ அம்மன் அர்ஜூனன் மற்றும் அவரது மகள் மருமகன், பேத்தி ஆகிய நால்வரும் கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் இருந்து கொரோனா சிகிச்சைக்கு பின் குணமடைந்து வீடு திரும்பினர்.

மதுரையில் இருந்து கோவை வந்த எம்எல்ஏ அம்மன் அர்ஜூனனின் மகள், மருகன், பேத்தி ஆகியோருக்கு கடந்த 30 ஆம் தேதி கொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து அனைவரும்கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதனை தொடர்ந்து எம்எல்ஏ அம்மன் அர்ஜூனனுக்கும் தொற்று உறுதியானதால் கடந்த ஞாயிற்றுக்கிழமை இஎஸ்ஐ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இன்று எம்எல்ஏ மற்றும் அவரது குடும்பத்தினருக்கு கொரோனா பரிசோதனையில் நெகடிவ் என வந்தத்தால் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். சட்ட மன்ற உறுப்பினர் அம்மன் அர்ஜூனனுக்கு அறிகுறிகளே இல்லாத நிலையில் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்ட்டதை அடுத்து அவருக்கு இன்று மேற்கொண்ட சோதனையில் கொரோனா தொற்று நீங்கியதால் அனைவரும் டிஸ்சார்ஜ் செய்யபட்டனர்