×

“மு.க.ஸ்டாலினுக்கு ஜாதகம் சரியில்லை” அதிமுக அமைச்சரின் கணிப்பு!

மு. க. ஸ்டாலினுக்கு ஜாதகம் சரியில்லை என்று அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் விமர்சித்துள்ளார். சட்டப்பேரவை தேர்தல் தமிழகத்தில் நெருங்கி வரும் சூழலில் அதிமுக – திமுக கட்சிகள் தங்கள் பரப்புரையை தொடங்கியுள்ளனர். அதிமுக சார்பில் பரப்புரையை முதல்வர் பழனிசாமி மேற்கொண்டு வரும் சூழலில் திமுக சார்பில் மு.க. ஸ்டாலின் மக்கள் கிராம சபை கூட்டத்தை நடத்தி வருகிறார். இதுவொருபுறமிருக்க திமுக மக்கள் சபை கூட்டத்தில் அதிமுக பெண் ஒருவரை அனுப்பி தகராறு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதற்கு
 

மு. க. ஸ்டாலினுக்கு ஜாதகம் சரியில்லை என்று அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் விமர்சித்துள்ளார்.

சட்டப்பேரவை தேர்தல் தமிழகத்தில் நெருங்கி வரும் சூழலில் அதிமுக – திமுக கட்சிகள் தங்கள் பரப்புரையை தொடங்கியுள்ளனர். அதிமுக சார்பில் பரப்புரையை முதல்வர் பழனிசாமி மேற்கொண்டு வரும் சூழலில் திமுக சார்பில் மு.க. ஸ்டாலின் மக்கள் கிராம சபை கூட்டத்தை நடத்தி வருகிறார். இதுவொருபுறமிருக்க திமுக மக்கள் சபை கூட்டத்தில் அதிமுக பெண் ஒருவரை அனுப்பி தகராறு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதற்கு அதிமுக தரப்பில் மறுப்பு தெரிவித்ததுடன் கூட்டத்தில் பெண்ணை தாக்கியதற்காக கண்டனமும் தெரிவித்தனர்.

இத்தகைய பரபரப்பான சூழலில் மு.க. அழகிரி நேற்று தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார் . அதில் ஸ்டாலினால் முதல்வராக முடியாது. உடல்நல குன்றிய தந்தையை கட்டாயப்படுத்தி போட்டியிட வைத்தார்கள்; நான் எந்த முடிவை எடுத்தாலும் அதற்கு அனைவரும் சம்மதம் சொல்ல வேண்டும் என்று கூறினார். அழகிரியின் பேச்சுக்கு எதிர்வினையாற்றிய முதல்வர் பழனிசாமி, அழகிரி கட்சி தொடங்கினால் திமுக உடையும் என்றார்.

இந்நிலையில் மதுரை உசிலம்பட்டியில் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், “மு.க. ஸ்டாலினுக்கு ஜாதகம் சரியில்லை; முதல்வர் பழனிசாமிக்கு தான் ஜாதகம் நல்லதாக உள்ளது. ஏற்கனவே வந்தவர் வந்த வழியே போய் விட்டார்” என்றார்.