×

டீ குடிக்க சென்ற வழக்கறிஞர் மீது வெந்நீரை ஊற்றிய உணவக நிர்வாகிகள் : 7 பேர் கைது!

டீ குடிக்க சென்ற வழக்கறிஞர் மீது தாக்குதல் நடத்தி வெந்நீரை ஊற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாளையங்கோட்டை முருகன்குறிச்சியில் உள்ள உணவகத்திற்கு வ.உ.சி நகரைச் சேர்ந்த வழக்கறிஞர் பிரம்மா டீ குடிக்க வந்துள்ளார். அப்போது அவரை சூழ்ந்து கொண்ட உணவக ஊழியர்கள், எங்கள் கடையில் டீ குடித்து விட்டு எங்கள் மீதே வழக்குதொடர்ந்து பணம் கேட்பாயா? என்று கூறி தகராறு செய்துள்ளனர். பின்னர் அவரை உணவகத்திற்குள் அழைத்து சென்று சரமாரியாக தாக்குதல் நடத்தியுள்ளனர். பின்னரே அவர் மீது
 

டீ குடிக்க சென்ற வழக்கறிஞர் மீது தாக்குதல் நடத்தி வெந்நீரை ஊற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாளையங்கோட்டை முருகன்குறிச்சியில் உள்ள உணவகத்திற்கு வ.உ.சி நகரைச் சேர்ந்த வழக்கறிஞர் பிரம்மா டீ குடிக்க வந்துள்ளார். அப்போது அவரை சூழ்ந்து கொண்ட உணவக ஊழியர்கள், எங்கள் கடையில் டீ குடித்து விட்டு எங்கள் மீதே வழக்குதொடர்ந்து பணம் கேட்பாயா? என்று கூறி தகராறு செய்துள்ளனர். பின்னர் அவரை உணவகத்திற்குள் அழைத்து சென்று சரமாரியாக தாக்குதல் நடத்தியுள்ளனர். பின்னரே அவர் மீது வெந்நீரை ஊற்றியுள்ளனர்.

இதுகுறித்து தகவலறிந்து 100ற்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் உணவகம் முன் கூடினர். இதனால் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதை தொடர்ந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் , உணவக நிர்வாகிகள் ஹரி, மணிகண்டன் மற்றும் ஊழியர்கள் 5 பேர் என மொத்தம் 7 பேரை கைது செய்தனர்.
வழக்கறிஞர் பிரம்மா ஏற்கெனவே இந்த உணவகத்தின் மீது நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, நஷ்டஈடு வசூலித்துள்ளார். இதனால் அவரைகடை நிர்வாகிகள் தாக்கியுள்ளனர்.

இந்த உணவகம் கட்டடம் விதிகளை மீறி கட்டப்பட்டுள்ளதாலும், காலாவதியான உணவுகளை கொடுத்தாலும் உணவகம் மீது வழக்கு தொடர்ந்ததாக வழக்கறிஞர் பிரம்மா கூறியுள்ளார். இருப்பினும் அவர் உள்நோக்கத்துடன் வழக்கு தொடர்ந்ததாகவும் சிலர் குற்றம் சாட்டுகின்றனர்.