×

வீடியோ கான்பரன்ஸ் முறையில் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி பங்கேற்பார்கள் – நிர்வாகிகள் தகவல்

ராமர் கோவில் அடிக்கல்நாட்டு விழாவை எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி ஆகியோர் வீடியோ கான்ஃபரன்ஸிங் முறையில் காண்பார்கள் என்று ராமர் கோவில் அறக்கட்டளை நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். வருகிற 5ம் தேதி அயோத்தியில் ராமர் கோவில் பூமி பூஜை நடக்கிறது. இதில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். பிரதமர் என்ற முறையில் மோடிக்கு அழைப்பு அனுப்பப்பட்டது. ஆனால், குடியரசுத் தலைவருக்கு அழைப்பு அனுப்பப்பட்டது தொடர்பாக எந்த ஒரு தகவலும் இல்லை. அதே போல், அயோத்தியில் ராமர் பிறந்த இடம் என்று
 

ராமர் கோவில் அடிக்கல்நாட்டு விழாவை எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி ஆகியோர் வீடியோ கான்ஃபரன்ஸிங் முறையில் காண்பார்கள் என்று ராமர் கோவில் அறக்கட்டளை நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.


வருகிற 5ம் தேதி அயோத்தியில் ராமர் கோவில் பூமி பூஜை நடக்கிறது. இதில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். பிரதமர் என்ற முறையில் மோடிக்கு அழைப்பு அனுப்பப்பட்டது. ஆனால், குடியரசுத் தலைவருக்கு அழைப்பு அனுப்பப்பட்டது தொடர்பாக எந்த ஒரு தகவலும் இல்லை. அதே போல், அயோத்தியில் ராமர் பிறந்த இடம் என்று சொல்லப்படும் இடத்தில் கோவில் கட்டப்பட காரணமாக இருந்தவர்கள் முன்னாள் துணைப் பிரதமர் அத்வானி மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் முரளி மனோகர் ஜோஷி. இவர்களுக்கு விழாவில் பங்கேற்க அழைப்பு அனுப்பப்படவில்லை என்று கூறப்படுகிறது.


கொரோனா பாதிப்பு காரணமாக விழாவில் பங்கேற்க 200 பேருக்கு மட்டுமே அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது. ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் இந்த விழாவில் பங்கேற்கிறார். மற்றவர்கள் வீட்டில் இருந்தே நேரடி ஒளிபரப்பு மூலமாக நிகழ்ச்சியை காணலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்வானி, முரளி மனோகர் ஜோஷிக்கு அழைப்பு அனுப்பப்படாதது சர்ச்சையை ஏற்படுத்தியது. இது குறித்து ராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்ர அறக்கட்டளை தரப்பில் பேசிய சிலர், “அத்வானி, முரளி மனோகர் ஜோஷி ஆகியோரின் உடல் நலனைக் கருத்தில் கண்டே அழைப்பு அனுப்பவில்லை. அதே நேரத்தில் பிரத்தியேகமாக அவர்களுக்கு வீடியோ கான்ஃபரன்ஸிங்

முறையில் அவர்களுக்கு நேரடி ஒளிபரப்பு செய்யப்படும். அவர்கள் பார்ப்பது அயோத்தியில் ஒளிபரப்பு செய்யப்படும்” என்று தெரிவித்துள்ளனர். ராமர் கோவில் அடிக்கல் நாட்டு விழாவையொட்டி அயோத்தியே அகல் விளக்கு வெளிச்சத்தில் பிரகாசிக்கும் வகையில் 1.25 லட்சம் அகல் விளக்குகளுக்கு ஆர்டர் செய்யப்பட்டுள்ளதாகவும், பல்வேறு சிறப்பு நிகழ்வுகள், பூஜைகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.