×

“தவறு செய்தவர்கள் மீது தயவு தாட்சண்யமின்றி நடவடிக்கை எடுக்கலாம்” – செல்லூர் ராஜூ ஆவேசம்!!

3 முன்னாள் அமைச்சர்கள் நலனுக்காக ஸ்மார்ட் சிட்டி திட்டம் செயல்படுத்த பட்டதாக நிதியமைச்சர் கூறியிருந்த நிலையில் செல்லூர் ராஜூ பதிலடி கொடுத்துள்ளார். மதுரையில் பல ஆண்டுகளாக நடக்காமல் இருந்த ஸ்மார்ட் சிட்டி திட்ட கூட்டம் நடக்கவுள்ளது. 3 அமைச்சர்கள் ஊழல் செய்து சம்பாதிப்பதற்காகவே ஸ்மார்ட் சிட்டி திட்டம் அவசர அவசரமாக கொண்டு வரப்பட்டுள்ளது. எந்தத்துறையில் எப்படி ஊழல் செய்யலாம் என்ற அடிப்படையிலே ஸ்மார்ட் சிட்டி திட்டம் நடந்துள்ளது. தேவைக்கும், ஜனநாயகத்துக்கும் முரணாக ஸ்மார்ட் சிட்டி திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.
 

3 முன்னாள் அமைச்சர்கள் நலனுக்காக ஸ்மார்ட் சிட்டி திட்டம் செயல்படுத்த பட்டதாக நிதியமைச்சர் கூறியிருந்த நிலையில் செல்லூர் ராஜூ பதிலடி கொடுத்துள்ளார்.

மதுரையில் பல ஆண்டுகளாக நடக்காமல் இருந்த ஸ்மார்ட் சிட்டி திட்ட கூட்டம் நடக்கவுள்ளது. 3 அமைச்சர்கள் ஊழல் செய்து சம்பாதிப்பதற்காகவே ஸ்மார்ட் சிட்டி திட்டம் அவசர அவசரமாக கொண்டு வரப்பட்டுள்ளது. எந்தத்துறையில் எப்படி ஊழல் செய்யலாம் என்ற அடிப்படையிலே ஸ்மார்ட் சிட்டி திட்டம் நடந்துள்ளது. தேவைக்கும், ஜனநாயகத்துக்கும் முரணாக ஸ்மார்ட் சிட்டி திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. ஸ்மார்ட் சிட்டி பணிகள் தொடங்கிய நாள் முதல் நடந்துள்ள முறைகேடுகள் குறித்து நிதி தணிக்கை செய்ய வேண்டும். முறைகேடுகள் நடத்திருப்பது உறுதியானால் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜூ, “மதுரையில் ஸ்மார்ட் சிட்டி உட்பட எந்த வளர்ச்சி திட்டத்திலும் தவறு நடக்கவில்லை. ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளில் 75% நிதி அமைச்சரின் தொகுதியில் தான் நடைபெறுகிறது. சட்டம் உங்கள் கையில் உள்ளதால் தவறு செய்தவர்கள் மீது தயவு தாட்சண்யமின்றி நடவடிக்கை எடுக்கலாம். அதிமுகவின் திட்டங்களை கொச்சைப்படுத்தி நிதியமைச்சர் பேசுவது தவறு ” என்றார்.