×

“கட்சியை விட்டு சென்றவர்கள் உதிர்ந்த முடியை போன்றவர்கள்” எடப்பாடி பழனிசாமி!

சேலம் மாவட்டம் ஓமலூரில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்ததற்கு பின்பு அக்கட்சியில் சலசலப்பு ஏற்பட்டு வருகிறது. அரசியலில் இருந்து ஒதுங்கி இருப்பதாக கூறிய சசிகலா மீண்டும் அதிமுகவை கைப்பற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் காய் நகர்த்தி வருகிறார். அதிமுக தொண்டர்கள் நிர்வாகிகள் தொலைபேசியில் அழைத்து பேசி வரும் சசிகலா, அதிமுகவை கைப்பற்றுவேன் ; அம்மா உருவாக்கிய எம்எல்ஏக்களை கட்சியில்
 

சேலம் மாவட்டம் ஓமலூரில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்ததற்கு பின்பு அக்கட்சியில் சலசலப்பு ஏற்பட்டு வருகிறது. அரசியலில் இருந்து ஒதுங்கி இருப்பதாக கூறிய சசிகலா மீண்டும் அதிமுகவை கைப்பற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் காய் நகர்த்தி வருகிறார். அதிமுக தொண்டர்கள் நிர்வாகிகள் தொலைபேசியில் அழைத்து பேசி வரும் சசிகலா, அதிமுகவை கைப்பற்றுவேன் ; அம்மா உருவாக்கிய எம்எல்ஏக்களை கட்சியில் இருந்து நீக்குவது தவறு என்பதை இபிஎஸ் ஓபிஎஸ் உணர வேண்டும் என பேசி வருகிறார். இதனிடையே மாவட்ட வாரியாக சசிகலாவுக்கு எதிராக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. அத்துடன் சசிகலாவுடன் தொலைபேசி பேசுபவர்கள் கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டு வருகிறார்கள்.

ஓமலூரில் உள்ள அதிமுக மாவட்ட கட்சி அலுவலகத்தில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்நிலையில் கட்சி நிர்வாகிகள் மத்தியில் பேசிய எடப்பாடி பழனிசாமி, அதிமுகவின் உண்மை தொண்டன் எல்லாம் சொக்கத்தங்கம்; கட்சியை விட்டு சென்றவர்கள் எல்லாம் தலையிலிருந்து உதிர்ந்த முடியை போன்றவர்கள். உதிர்ந்த முடி ஒன்றுக்கும் உதவாது என்றார்.ஏற்கனவே சசிகலாவை முன்னாள் அமைச்சர்கள் சண்முகம், ஆர்பி உதயகுமார், விஜயபாஸ்கர் என பலரும் விமர்சித்து பேசி வரும் நிலையில் சசிகலா விரைவில் ஜெயலலலிதா சமாதிக்கு சென்ற பின்னர் தொண்டர்களை சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.