×

“நான் பாஜகவில் சேரப்போகிறேனா? அதெல்லாம் புதைந்த செய்தி” – நடிகர் வடிவேலு

பாஜகவில் நடிகர் வடிவேலு இணைகிறாரா? என்பது குறித்து அவரே பிரபல தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டிக் கொடுத்துள்ளார். தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வருகிறது. இதனால் பிரதான கட்சிகள் அனைத்தும் கட்டமைப்பை பலப்படுத்தும் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளன. திமுக முதன்முறையாக ஆன்லைன் உறுப்பினர் சேர்க்கையை நடத்தி வருகிறது. பாஜகவும் உறுப்பினர் சேர்க்கையில் தீவிரமாக இறங்கியுள்ளது. அண்மையில் நடிகை நமிதா, நடிகை குஷ்பு, மோகன் வைத்தியா உள்ளிட்ட பலர் பாஜகவில் இணைந்தனர். அந்த வகையில் நடிகர் வடிவேலுவும் பாஜகவில் இணைய உள்ளதாக
 

பாஜகவில் நடிகர் வடிவேலு இணைகிறாரா? என்பது குறித்து அவரே பிரபல தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டிக் கொடுத்துள்ளார்.

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வருகிறது. இதனால் பிரதான கட்சிகள் அனைத்தும் கட்டமைப்பை பலப்படுத்தும் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளன. திமுக முதன்முறையாக ஆன்லைன் உறுப்பினர் சேர்க்கையை நடத்தி வருகிறது. பாஜகவும் உறுப்பினர் சேர்க்கையில் தீவிரமாக இறங்கியுள்ளது. அண்மையில் நடிகை நமிதா, நடிகை குஷ்பு, மோகன் வைத்தியா உள்ளிட்ட பலர் பாஜகவில் இணைந்தனர்.

அந்த வகையில் நடிகர் வடிவேலுவும் பாஜகவில் இணைய உள்ளதாக சமூக வலைத்தளங்களில் தகவல்கள் கசிந்தது. இது குறித்து பிரபல தனியார் தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில், தான் பாஜகவில் சேரவிருக்கிறேன் என்பதெல்லாம் புதைந்து போன செய்தி என அவரது பாணியிலேயே தெரிவித்திருக்கிறார். இதே போல, நடிகை வனிதா விஜயகுமார் பாஜகவில் இணைய உள்ளதாக பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.