×

முதல்வரை திடீரென சந்தித்த நடிகர் சூரி!

முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டதற்கு திரைப்பிரபலங்கள் பலரும் வாழ்த்து கூறி வருகின்றனர். அதிமுக முதல்வர் வேட்பாளராக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடந்த 7 ஆம் தேதி தேர்வு செய்யப்பட்டார்.கட்சியில் தற்போதுள்ள சூழலையும், கடந்த 4 ஆண்டு கால ஆட்சியையும் கருத்தில் கொண்டு முதல்வர் பழனிசாமியே வரும் சட்டமன்ற தேர்தலில் களம்காண உள்ளார். இந்நிலையில் 2021 சட்டப்பேரவை தேர்தல் அதிமுக முதல்வர் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டுள்ள முதல்வர் பழனிசாமிக்கு பலரும் வாழ்த்து கூறிவருகின்றனர். அந்த வகையில்
 

முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டதற்கு திரைப்பிரபலங்கள் பலரும் வாழ்த்து கூறி வருகின்றனர்.

அதிமுக முதல்வர் வேட்பாளராக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடந்த 7 ஆம் தேதி தேர்வு செய்யப்பட்டார்.கட்சியில் தற்போதுள்ள சூழலையும், கடந்த 4 ஆண்டு கால ஆட்சியையும் கருத்தில் கொண்டு முதல்வர் பழனிசாமியே வரும் சட்டமன்ற தேர்தலில் களம்காண உள்ளார். இந்நிலையில் 2021 சட்டப்பேரவை தேர்தல் அதிமுக முதல்வர் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டுள்ள முதல்வர் பழனிசாமிக்கு பலரும் வாழ்த்து கூறிவருகின்றனர்.

அந்த வகையில் நடிகர் சூரி முதல்வரை நேரில் சந்தித்து பூங்கொத்துக்களை வழங்கி அவருக்கு வாழ்த்து தெரிவித்தார். முன்னதாக நடிகர்கள் சிங்கமுத்து, நடிகர் மனோ பாலா, நடிகை விந்தியா மற்றும் ரவி மரியா ஆகியோர் முதல்வரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.