×

கந்த சஷ்டி கவசத்தை திருத்தி வெளியிட்டவர்கள் மீது நடவடிக்கை! – ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

கந்த சஷ்டி கவசத்தைத் தவறான பொருள்படத் திருத்தி வெளியிட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் “தமிழர்களுடைய கடவுளான முருகனை இழிவுபடுத்தும் வகையிலே கந்தசஷ்டி கவசப் பாடலின் பொருளை பெருமையைத் தவறான பொருள்படத் திருத்தி வெளியிடப்பட்டுள்ளது. இச்செயல் கோடிக்கணக்கான பக்தர்களின் உணர்வுகளை அவமதிக்கும் செயல். இது மிகவும் கண்டிக்கத்தக்கது. மிகுந்த வேதனைக்குரியது. மதங்களைப் பற்றி வெளிப்படையாக அவதூறாகப் பேசுவதற்கு யாருக்கும் உரிமையில்லை. குறிப்பாக, எம்மதமானாலும்
 

கந்த சஷ்டி கவசத்தைத் தவறான பொருள்படத் திருத்தி வெளியிட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் “தமிழர்களுடைய கடவுளான முருகனை இழிவுபடுத்தும் வகையிலே கந்தசஷ்டி கவசப் பாடலின் பொருளை பெருமையைத் தவறான பொருள்படத் திருத்தி வெளியிடப்பட்டுள்ளது. இச்செயல் கோடிக்கணக்கான பக்தர்களின் உணர்வுகளை அவமதிக்கும் செயல். இது மிகவும் கண்டிக்கத்தக்கது. மிகுந்த வேதனைக்குரியது.


மதங்களைப் பற்றி வெளிப்படையாக அவதூறாகப் பேசுவதற்கு யாருக்கும் உரிமையில்லை. குறிப்பாக, எம்மதமானாலும் இறை நம்பிக்கையை இழிவுபடுத்துவது மதத்தை அவமானப்படுத்துவதாகும். எனவே, இதனை தவறான நோக்கத்தோடு வெளியிட்ட ‘கறுப்பர் கூட்டத்தினர்’ மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், மறைந்த தலைவர்களை அவமதிக்கும் வகையிலே செயல்படுபவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இது போன்ற சம்பவங்கள் இனிமேல் நடைபெறாமல் இருக்க தவறு செய்தவர்களுக்கு கடும் தண்டனை கொடுக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.