×

கிசான் திட்டத்தில் திருச்சியிலும் முறைகேடு!

விவாசாயிகளுக்கு நிதி உதவி வழங்கும் விதமாக மத்திய அரசு விவசாய நிதியுதவி (பி.எம். கிசான்) திட்டம் தொடங்கியது. இந்த திட்டத்தின் மூலம் நாடு முழுவதும் பல விவசாயிகள் பயன்பெற்றுள்ளனர். இந்நிலையில் தமிழகத்தில் கடலூர் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் கிசான் திட்டத்தில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது. பிரதமர் கிசான் உதவி திட்டத்தில் விவசாயிகள் அல்லாத பயனாளிகள் சேர்க்கப்பட்டு நிவாரணம் பெற்று கோடிக்கணக்கில் மோசடி செய்தது அம்பலமானது. இதனையடுத்து கிசான் திட்டத்தில் முறைகேடு மற்றும் மோசடி செய்தவர்கள் மீது
 

விவாசாயிகளுக்கு நிதி உதவி வழங்கும் விதமாக மத்திய அரசு விவசாய நிதியுதவி (பி.எம். கிசான்) திட்டம் தொடங்கியது. இந்த திட்டத்தின் மூலம் நாடு முழுவதும் பல விவசாயிகள் பயன்பெற்றுள்ளனர். இந்நிலையில் தமிழகத்தில் கடலூர் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் கிசான் திட்டத்தில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது. பிரதமர் கிசான் உதவி திட்டத்தில் விவசாயிகள் அல்லாத பயனாளிகள் சேர்க்கப்பட்டு நிவாரணம் பெற்று கோடிக்கணக்கில் மோசடி செய்தது அம்பலமானது. இதனையடுத்து கிசான் திட்டத்தில் முறைகேடு மற்றும் மோசடி செய்தவர்கள் மீது விசாரணை நடத்தில் நடவடிக்கை எடுக்க வேளாண்மைத் துறை முதன்மைச் செயலா் ககன்தீப் தனி குழு அமைத்து விசாரணை மேற்கொள்ள உத்தரவிட்டார். அதன்படி கிசான் திட்டத்தில் முறைகேடு செய்ததாக கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த 7பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் இத்திட்டத்தில் மோசடி செய்த நபர்களிடம் இருந்து இதுவரை சுமார் 7 கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பிரதமரின் விவசாயிகள் உதவித் திட்டத்தில் திருச்சி மாவட்டத்தில் மொத்தம் 1.51 லட்சம் விவசாயிகள் பதிவு செய்திருந்தனர். அதன்பின் கொரோனா காலத்தில் அதாவது ஏப்ரல் மாதத்திற்கு பிறகு மட்டும் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பதிவு செய்துள்ளனர். இதில் ஏதேனும் முறைகேடு உள்ளதா? என்று வேளாண்துறை, வருவாய்த்துறை அதிகாரிகள் வட்டார அளவில் திருச்சி மாவட்டத்தின் 15 வட்டங்களில் ஆய்வு செய்தனர். அப்போது வெளி மாவட்டத்தினர், விவசாயிகள் அல்லாதோர் இருப்பதாக முதல்கட்ட விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.