×

ஆடி சுவாதி… சுந்தரர் திருக்கயிலை ஏகி இன்புற்ற சிறப்பு தினம்!

கல்யாணத்தை நிறுத்திய கிழவருடன் தோழமை பூண்டு “தம்பிரான் தோழர்” என ஈசனுக்கே தோழராக இருந்து பேறுபெற்றவர் சுந்தரமூர்த்தி நாயனார். திருத்தொண்டத் தொகை’ என்ற அற்புத பதிகம் எழுதி சிவனடியார்களான நாயன்மார்களை உலகறியச் செய்தவர. சைவசமயம் போற்றூம் தேவார மூவரில் ஒருவர். பன்னிருதிருமுறைகளில் ஏழாம் திருமுறை பதிகங்களை அருளியவர். சேக்கிழார் அருளிச்செய்த பெரியபுராணத்தின் காதநாயகர் சுந்தரமூர்த்தி நாயானார். மண்ணில் தாய்- தந்தைக்கு மகனாய் பிறந்து வளர்ந்திருந்தாலும் சுந்தரர், ஈசனின் அம்சமே ஆவார். காரணம் மதுரையில் மீனாட்சியாய் பிறந்த வளர்ந்த
 

கல்யாணத்தை நிறுத்திய கிழவருடன் தோழமை பூண்டு “தம்பிரான் தோழர்” என ஈசனுக்கே தோழராக இருந்து பேறுபெற்றவர் சுந்தரமூர்த்தி நாயனார். திருத்தொண்டத் தொகை’ என்ற அற்புத பதிகம் எழுதி சிவனடியார்களான நாயன்மார்களை உலகறியச் செய்தவர. சைவசமயம் போற்றூம் தேவார மூவரில் ஒருவர். பன்னிருதிருமுறைகளில் ஏழாம் திருமுறை பதிகங்களை அருளியவர். சேக்கிழார் அருளிச்செய்த பெரியபுராணத்தின் காதநாயகர் சுந்தரமூர்த்தி நாயானார்.

மண்ணில் தாய்- தந்தைக்கு மகனாய் பிறந்து வளர்ந்திருந்தாலும் சுந்தரர், ஈசனின் அம்சமே ஆவார். காரணம் மதுரையில் மீனாட்சியாய் பிறந்த வளர்ந்த பார்வதிதேவியை மணமுடிக்க வந்த சிவபெருமான். மணமகனாக அலங்கரிக்கப்பட்ட தனது எழிலை கண்ணாடியில் பார்த்து, புலித்தோல் உடுத்தி , சாம்பல் பூசி, சடையனாய் திரிந்த தாம் தான இது என வியந்து தன் அழகுருவை ” சுந்தரா வா” என அழைத்தார். கண்ணாடியில் தெரிந்த அவரது பிம்பம் வெளியே வந்தது. அவரே சுந்தரன் என்ற பெயரில் கயிலாயத்தில் ஈசனுக்குத் அணுக்க தொண்டராக இருந்து சேவையாற்றி வந்தார்.

அமுதத்திற்காக பாற்கடலை கடைந்த போது பெருகிவந்த ஆலகால விஷத்தைக் கண்டு அகிலமே அஞ்சிய போது, அதனை ஈசனின் ஆணையை ஏற்று அள்ளித் திரட்டி எடுத்து கொண்டு வந்து ஆலால சுந்தரர்’ என்ற பெயரைப் பெற்றவர். அவரே பூலோகத்தில் ஆரூரன்’ என்ற பெயரில் பிறந்தார். திருநாவலூரில் சடையனார்-இசை ஞானியார் தம்பதியின் மகனாகப் பிறந்து, திருமுனைப்பாடி நாட்டு அரசரான நரசிங்க முனையரையருக்கு வளர்ப்பு மகனாக வளர்ந்து, திருமண வேளையில் ஈசனால் தடுத்தட்கொள்ளப்பட்ட சுந்தரர். அழகுத் தமிழால் ஆண்டவனையே வசப்படுத்தியவர். சுந்தரரின் குருபூஜை ஆடி சுவாதி நட்சத்திரம் (28.7.20) அன்று வருகிறது.

தம்பிரான் தோழராய் தமிழகமெங்கும் யாத்திரை செய்து ஈசன் கோயில் கொண்டுள்ள தலங்களில் தன் சுந்தர தமிழால் பதிகம் பாடியவர் சுந்தரர். அவரது இப்பணி திருநாலூர் திருதலத்தில் தன்னை தடுத்தட்கொண்ட ஈசன் கிருபாபுரிஸ்வரர் சன்னதியில் இருந்து தொடங்கியது . கடவுளை பார்த்து பையித்தியமே என்று பொருள் படும்படியான –
பித்தாபிறை சூடீபெருமானே அருளாளா எத்தான்மற வாதேநினைக் கின்றேன் மனத் துன்னை
வைத்தாய்பெண்ணைத் தென்பால் வெண்ணெய்நல்லூர் அருட்டுறையுள்
அத்தாஉனக் காளாயினி அல்லேன் எனல் ஆமே. என்று மதிகம் பாட தொடங்கியவர் சுந்தரர். ஈசனால் முதல் திருமண தடுத்து நிறுத்தப்பட்டாலும் தன் பிறப்பிற்கு காரணமான கைலாயத்தில் பார்வதியின் பணிப்பெணகளாய் இருந்து , பின் மண்ணில் பிறந்த பரவைநாச்சியார் , சங்கிலி நாச்சியார் என்ற இருபெண்களை மணந்தார்.

சங்கிலி நாச்சியாருக்கு கொடுத்த வாக்கை மீறி கண்பார்வை இழந்தார் பின் ஈசனருளால் பார்வை பெற்றார். அச்சமயம் ஈசனிடமே கோபப்பட்டார்.

மீளா அடிமை உமக்கே ஆளாய்ப் பிறரை வேண்டாதே
மூளாத் தீப்போல் உள்ளே கனன்று முகத்தால் மிகவாடி
ஆளாய் இருக்கும் அடியார் தங்கள் அல்லல் சொன்னக்கால்
வாளாங் கிருப்பீர் திருவா ரூரீர் வாழ்ந்து போதீரே!.. (7/95) என்று பதிகம் பாடியவர்.

தில்லை வாழ் அந்தணர் தம் அடியார்க்கும் அடியேன் என்று அரசன் முதல் ஆண்டி வரை சிவனடியார்களைத் தொகுத்துக் கூறும் திருத்தொண்டத் தொகையினை அருளியவர்.

மற்றுப் பற்றெனக் கின்றி நின்திருப் பாத மேமனம் பாவித்தேன்
பெற்ற லும்பிறந் தேன்இ னிப்பிற வாத தன்மைவந் தெய்தினேன்
கற்ற வர்தொழு தேத்துஞ் சீர்க்கறை யூரிற் பாண்டிக் கொடுமுடநற்ற வாஉனை நான்ம றக்கினுஞ் சொல்லும்நா நமச்சி வாயவே – என்று நானே மறந்தாலும் என் நாக்கு உன்
திருநாமத்தை மறக்காது
என பாடிபபரவிய சுந்தரமூர்த்தி நாயானார்
வாழும் காலத்தில் வள்ளல் மனத்தினராக – வாழ்வாங்கு வாழ்ந்து , இன்றைய கேரள தேசத்தின் திருஅஞ்சைக் களத்திலிருந்து திருக்கயிலை செல்ல விழைந்தார்.  அவரை அழைத்துச் செல்ல கைலாயத்தில் இருந்து வெள்ளை யானை வந்து நின்றது அந்த நாள், ஆடி மாதம் – சுவாதி நட்சத்திரம் .

இந்திரன் முதலான தேவரெல்லாம் எதிர்கொண்டழைத்தனர்.

இந்திரன் மால்பிரமன் எழிலார்மிகு தேவரெல்லாம்
வந்தெதிர் கொள்ளஎன்னை மத்தயானை அருள்புரிந்து
மந்திர மாமுனிவர் இவன்ஆர்என எம்பெருமான்
நந்தமர் ஊரன் என்றான் நொடித்தான்மலை உத்தமனே!..(7/100)

கைலாயம் சென்ற அம்மையப்பன் திருவடிகளை வீழ்ந்து வணங்கினார் சுந்தரர். மீண்டும் இறைவனின் அணுக்கத் தொண்டராகி அருகிருந்தார்.


இன்று ஆடி சுவாதி. சுந்தரர் திருக்கயிலை ஏகி இன்புற்ற நாள். எல்லா சிவாலயங்களிலும் சுந்தரர் குருபூஜை கொண்டாடப்படுகிறது
சமயாச்சார்யார்கள் நால்வருள் ஒருவரான சுந்தரர் வன்தொண்டர் எனப்பட்டவர். வாழிதிருநாவலூர் வன் தொண்டர் பதம் போற்றி – எனபோற்றுகிறார் சந்தனாச்சாரியார்களில் ஒருவரான உமாபதிசிவம் . நாமும் இன்நன்நாளில் சுந்தர் பதம் போற்றி ஈசன் அருள் பெறுவோம்.

-மு.ரா.சுந்தரமூர்த்தி.