×

இந்த காலத்துல இப்படி ஒரு திருடனா… திருச்சியில் அரங்கேறிய வியப்பூட்டும் சம்பவம்!

திருச்சியில் இளம்பெண் செல்போனில் கெஞ்சியதால் திருடன் திரும்பி வந்து ஹேண்ட்பேக்கை ஒப்படைத்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் பகுதியை சேர்ந்த இளஞ்சியம் என்பவரும் அவரது மகளும் சில நாட்களுக்கு முன்னர் எடமலைப்பட்டி புதூர் பகுதியில் வசித்து வரும் தனது தோழியை பார்ப்பதற்காக சென்றுள்ளனர். செல்லும் வழியில் இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம தெரியாத நபர்கள் கையிலிருந்த ஹேண்ட்பேக்கை பிடுங்கிக் கொண்டு சென்றுள்ளனர். அதில் 15 ஆயிரம் ரூபாய் ரொக்கமும் இரண்டு ஏடிஎம் கார்டுகளும் இரண்டு
 

திருச்சியில் இளம்பெண் செல்போனில் கெஞ்சியதால் திருடன் திரும்பி வந்து ஹேண்ட்பேக்கை ஒப்படைத்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் பகுதியை சேர்ந்த இளஞ்சியம் என்பவரும் அவரது மகளும் சில நாட்களுக்கு முன்னர் எடமலைப்பட்டி புதூர் பகுதியில் வசித்து வரும் தனது தோழியை பார்ப்பதற்காக சென்றுள்ளனர். செல்லும் வழியில் இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம தெரியாத நபர்கள் கையிலிருந்த ஹேண்ட்பேக்கை பிடுங்கிக் கொண்டு சென்றுள்ளனர். அதில் 15 ஆயிரம் ரூபாய் ரொக்கமும் இரண்டு ஏடிஎம் கார்டுகளும் இரண்டு செல்போன்களும் இருந்துள்ளது. இதையடுத்து இளஞ்சியமும் அவரது மகளும் காவல் நிலையத்தில் புகார் அளிக்க சென்றுள்ளனர். மறுநாள் வந்து புகாரளிக்குமாறு போலீசார் சொல்லியதால் வீடு திரும்பியுள்ளனர்.

generic, handbag, snatch, crime, bag, theft, stealing, robbery

அன்று இரவு இளஞ்சியத்தின் மகள் தனது செல்போன் எண்ணுக்கு கால் செய்துள்ளார். யாராவது எடுத்தால் பொருட்களைப் பற்றிய விவரம் தெரியவரும் என நினைத்து அவர் போன் செய்த நிலையில், அந்த திருடனே எடுத்து பேசியுள்ளார். அப்போது தங்களது குடும்ப சூழ்நிலையை எடுத்துச் சொல்லி போன் மற்றும் ஏடிஎம் கார்டை மட்டும் திருப்பி தருமாறு இளம்பெண் கேட்டுள்ளார். அதற்கு ஒப்புக்கொண்ட திருடன் மறுநாள் சென்னை – திருச்சி பைபாஸ் அருகே வரச்சொல்லி சில அடி தூரத்தில் நின்று கொண்டு ஹேண்ட்பேக்கை வீசி விட்டு அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். அதில் இருந்த 15 ஆயிரம் ரூபாய் ரொக்கம் மட்டும் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. பிற பொருட்கள் அனைத்தும் பேக்கில் இருந்துள்ளன.

தங்க நகைகளுக்காகவும் பணத்துக்காகவும் திருடர்கள் ஒருவரை கொலை செய்யக் கூட தயங்காத இக்காலக்கட்டத்தில் திருடிய ஹேண்ட்பேக்கை திரும்பக் கொண்டு வந்து கொடுத்த இச்சம்பவம் மனிதம் இன்னும் வாழ்கிறது என்பதை உணர்த்துகிறது.