×

மோதிய கப்பல்… 11 மீனவர்கள் மாயம் : சந்தேகம் எழுப்பும் சீமான்

விசைப்படகு மீது அடையாளம் தெரியாத கப்பல் மோதியது குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று சீமான் வலியுறுத்தியுள்ளார். நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது ட்விட்டர் பக்கத்தில், “கன்னியாகுமரி மாவட்டம், தேங்காய் பட்டணம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து கடந்த ஏப்ரல் 9 அன்று ஆழ்கடல் மீன்பிடித் தொழிலுக்குச் சென்ற விசைப்படகு விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த வள்ளவிளை கிராமத்தைச் சேர்ந்த 11 மீனவர்கள் காணமல் போயினர் எனும் செய்தியறிந்து பெருந்துயருற்றேன். தமிழக அரசு உடனடியாக மத்திய அரசுடனும்,
 

விசைப்படகு மீது அடையாளம் தெரியாத கப்பல் மோதியது குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று சீமான் வலியுறுத்தியுள்ளார்.

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது ட்விட்டர் பக்கத்தில், “கன்னியாகுமரி மாவட்டம், தேங்காய் பட்டணம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து கடந்த ஏப்ரல் 9 அன்று ஆழ்கடல் மீன்பிடித் தொழிலுக்குச் சென்ற விசைப்படகு விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த வள்ளவிளை கிராமத்தைச் சேர்ந்த 11 மீனவர்கள் காணமல் போயினர் எனும் செய்தியறிந்து பெருந்துயருற்றேன். தமிழக அரசு உடனடியாக மத்திய அரசுடனும், கேரள அரசுடனும் இவ்விவகாரம் குறித்துக் கலந்துப்பேசி, காணாமல் போன 11 மீனவர்களையும் விரைந்து மீட்பதற்கான தேடுதல் நடவடிக்கைகளை உடனடியாக விரைந்து எடுக்க வேண்டும்.

மீனவர்களின் விலைமதிப்பற்ற உயிர்களை மீட்க, விமானப்படை விமானங்கள் மூலம் மீனவர்களைத் தேடும் முயற்சியை மேற்கொள்ளவும், பதினொரு மீனவர்களின் நிலை குறித்த தகவல்களை அவ்வப்போது அவர்களது குடும்பத்தினருக்குத் தெரியப்படுத்தவும் வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன். மேலும், அடையாளம் தெரியாத கப்பல் விசைப்படகில் மோதி விபத்துக்குள்ளானது குறித்து உரிய விசாரணையும் நடத்த வேண்டும்” என்று வலியுறித்தியுள்ளார்.