×

விவசாய நிலத்தில் இருந்த மின்வேலி தாக்கி ஒருவர் பரிதாப பலி

விலங்குகளிடம் இருந்து பயிர்களை காப்பதற்காக தமிழகத்தின் பல இடங்களில் மின்வேலி அமைக்கப்படுகிறது. ஆனால் மின்வேலியில் சிக்கும் விலங்குகள் பரிதாபமாக உயிரிழப்பதால் அரசு அதற்கு தடை விதித்துள்ளது. இருப்பினும் பல இடங்களில் மின்வேலி அமைக்கப்படுகிறது. சமீபத்தில் தென்காசி மாவட்டம் கடையம் அருகே முத்து என்பவர் சட்டவிரோதமாக மின்வேலி அமைத்ததால், வனத்துறை அதிகாரிகள் விசாரணைக்கு அழைத்து சென்ற போது உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை மதுரை உயர்நீதிமன்ற கிளையில் நடைபெற்று வருகிறது. இதனைத்தொடர்ந்து கடந்த 2 நாட்களுக்கு முன்னர்,
 

விலங்குகளிடம் இருந்து பயிர்களை காப்பதற்காக தமிழகத்தின் பல இடங்களில் மின்வேலி அமைக்கப்படுகிறது. ஆனால் மின்வேலியில் சிக்கும் விலங்குகள் பரிதாபமாக உயிரிழப்பதால் அரசு அதற்கு தடை விதித்துள்ளது. இருப்பினும் பல இடங்களில் மின்வேலி அமைக்கப்படுகிறது. சமீபத்தில் தென்காசி மாவட்டம் கடையம் அருகே முத்து என்பவர் சட்டவிரோதமாக மின்வேலி அமைத்ததால், வனத்துறை அதிகாரிகள் விசாரணைக்கு அழைத்து சென்ற போது உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை மதுரை உயர்நீதிமன்ற கிளையில் நடைபெற்று வருகிறது.

இதனைத்தொடர்ந்து கடந்த 2 நாட்களுக்கு முன்னர், பெரம்பலூர் மாவட்டம் கிருஷ்ணாபுரத்தில் வசித்து வந்த தம்பதி பெரியசாமி மற்றும் மலர்க்கொடி தங்களது சொந்த நிலத்தில் அமைந்திருந்த மின்வேலி தாக்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த நிலையில், காளியப்பன் என்பவரின் விவசாய நிலத்தில் வைக்கப்பட்டிருந்த மின்வேலியில் சிக்கி விஜயகுமார் என்பவர் உயிரிழந்துள்ளார்.

மின்வேலியில் இருந்த மின்சாரம் அவரை தாக்கியதால் அருகில் இருந்தவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு அழித்து சென்றுள்ளனர். ஆனால், விஜயகுமார் செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். தகவல் அறிந்து வந்த போலீசார், இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து மின்வேலி அமைத்தவர்களிடம் விசாரணை செய்து வருகின்றனர்.