×

வீடு ஏலம் விடப்படும் என கூறியதால் வங்கியின் முன் தீக்குளித்தவர் மரணம்!

கொரோனா பாதிப்பால் மக்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதில் இருந்து மக்கள் மீண்டு வர இன்னும் பல மாதங்கள் ஆகும் என கூறப்படுகிறது. மக்கள் மட்டுமல்லாது பல தொழில் நிறுவனங்கள் கடும் பாதிப்பை சந்தித்துள்ளன. இதனால் மக்கள் எல்லாரும் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்க வங்கிகளை நாடி படையெடுக்கின்றனர். இந்த நிலையில் வங்கியில் கடன் வாங்கிய நபர் அதனை திருப்பி செலுத்த முடியாமல் தீக்குளித்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சை மாவட்டம் வல்லத்தில் இருக்கும் வங்கி ஒன்றில் ஆனந்த்
 

கொரோனா பாதிப்பால் மக்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதில் இருந்து மக்கள் மீண்டு வர இன்னும் பல மாதங்கள் ஆகும் என கூறப்படுகிறது. மக்கள் மட்டுமல்லாது பல தொழில் நிறுவனங்கள் கடும் பாதிப்பை சந்தித்துள்ளன. இதனால் மக்கள் எல்லாரும் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்க வங்கிகளை நாடி படையெடுக்கின்றனர். இந்த நிலையில் வங்கியில் கடன் வாங்கிய நபர் அதனை திருப்பி செலுத்த முடியாமல் தீக்குளித்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சை மாவட்டம் வல்லத்தில் இருக்கும் வங்கி ஒன்றில் ஆனந்த் என்பவர் கடன் வாங்கியிருக்கிறார். ஊரடங்கால் அவர் கடனை செலுத்தவில்லை என கூறப்படுகிறது. அதனால் இன்று அவரை வங்கிக்கு அழைத்த வங்கி அதிகாரிகள் கடனை திரும்ப செலுத்தவில்லை என்றல் வீட்டை ஏலம் விட்டு விடுவோம் என எச்சரிக்கை விடுத்துள்ளனர். அதனால் மன உளைச்சல் அடைந்த ஆனந்த் வங்கியின் வாசலிலேயே தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

தகவல் அறிந்து வந்த வங்கி அதிகாரிகள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். ஆனால் தீக்குளித்ததால் படுகாயம் அடைந்த ஆனந்த் மருத்துவமனையில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.