×

உரிய சிகிச்சை அளிக்காத தனியார் மருத்துவமனை..மகனுடன் தந்தை தீக்குளிக்க முயற்சி!

திருச்சி மாவட்டம் பொன்மலை கல்கண்டார் கோட்டை பகுதியில் வசித்து வரும் தம்பதி நடராஜன்- பூங்கோதை. கடந்த சில நாட்களுக்கு முன்னர் பூங்கோதை வீட்டில் தவறி விழுந்ததால் உடல்நல குறைவால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் நடராஜன், பூங்கோதையை 15 நாட்களுக்கு முன்னர் தில்லை நகர் பகுதியில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். அங்கு பூங்கோதைக்கு முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டத்தில் சிகிச்சை அளிக்க முடியாது என்றும் பணம் செலுத்தி தான் சிகிச்சை செய்ய வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால்
 

திருச்சி மாவட்டம் பொன்மலை கல்கண்டார் கோட்டை பகுதியில் வசித்து வரும் தம்பதி நடராஜன்- பூங்கோதை. கடந்த சில நாட்களுக்கு முன்னர் பூங்கோதை வீட்டில் தவறி விழுந்ததால் உடல்நல குறைவால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் நடராஜன், பூங்கோதையை 15 நாட்களுக்கு முன்னர் தில்லை நகர் பகுதியில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். அங்கு பூங்கோதைக்கு முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டத்தில் சிகிச்சை அளிக்க முடியாது என்றும் பணம் செலுத்தி தான் சிகிச்சை செய்ய வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதனால் சுமார் 2 லட்சத்துக்கு மேல் நடராஜன் அந்த தனியார் மருத்துவமனையில் பணம் செலுத்தி இருக்கிறார். ஆனால் பணம் செலுத்தியும் மருத்துவமனையில் உரிய சிகிச்சை அளிக்கவில்லையாம். அதுமட்டுமில்லாமல் மேலும் அவரை பணம் செலுத்துமாறு மருத்துவமனை நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த நடராஜன் இன்று காலை மருத்துவமனை நிர்வாகத்தை கண்டித்து தனது மகனுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்றுள்ளார். அச்சமயம் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள், அவரை தடுத்து கைது செய்து அழைத்து சென்றுள்ளனர்.