×

உடுமலை அருகே மலைவாழ் பெண் நாட்டுத் துப்பாக்கியால் சுட்டுக் கொலை: பதைபதைக்கும் சம்பவம்!

சமீப காலமாக தமிழகத்தில் சந்தன மரக்கடத்தல் அதிகமாக நடைபெற்று வருகிறது. சமூக விரோதமான இந்த செயலில் யாரும் ஈடுபடக்கூடாது என அரசு எச்சரிக்கை விடுத்திருந்தும் இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்த வண்ணமே இருக்கின்றன. இந்த நிலையில், சந்தன கடத்தலில் ஈடுபட்ட நபரை வனக்காவலர்கள் விசாரிக்க சென்ற போது மலைவாழ் பெண் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே இருக்கும் மறையூரில் வசித்து வருபவர் காளியப்பன். இவர் சந்தன மர
 

சமீப காலமாக தமிழகத்தில் சந்தன மரக்கடத்தல் அதிகமாக நடைபெற்று வருகிறது. சமூக விரோதமான இந்த செயலில் யாரும் ஈடுபடக்கூடாது என அரசு எச்சரிக்கை விடுத்திருந்தும் இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்த வண்ணமே இருக்கின்றன. இந்த நிலையில், சந்தன கடத்தலில் ஈடுபட்ட நபரை வனக்காவலர்கள் விசாரிக்க சென்ற போது மலைவாழ் பெண் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே இருக்கும் மறையூரில் வசித்து வருபவர் காளியப்பன். இவர் சந்தன மர கடத்தலில் ஈடுபட்டு கைதாகி, சிறையில் இருந்து வெளியே வந்ததாக கூறப்படுகிறது. அவரிடம் விசாரணை மேற்கொள்வதற்காக வனக்காவலர்கள் சென்றுள்ளனர். ஏற்கனவே தன்னை கைது செய்ததால், வனக்காவலர்கள் மீது முன்விரோதத்தில் இருந்த காளியப்பன், தன்னை விசாரிக்க வருவதை அறிந்து அவர்களை நாட்டுத் துப்பாக்கியால் காவலர்களை சுட முயன்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக சந்திரிகா என்னும் மலைவாழ் பெண் குறுக்கே வர, குண்டு அவர் மீது பாய்ந்துள்ளது.

இதில் சந்திரிகா சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், சந்திரிகாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும், இந்த வழக்கில் தொடர்புடைய காளியப்பன் மற்றும் பெண்ணின் உறவினர் உட்பட 3 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த வழக்கில் சந்திரிகா, சந்தன மரக்கடத்தலில் கைதான நபர்களை காட்டி கொடுத்ததாகவும் அதனால் அவரை காளியப்பன் சுட்டுக் கொன்றதாகவும் கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.