×

மதுரையில் டிக்டாக் மூலம் பழகிய இளம் பெண்ணை நம்பி 97,000 ரூபாய் பணத்தை இழந்த இளைஞர்!

வேலையில்லாதவர்களுக்காக கண்டுபிடிக்கப்பட்ட டிக்டாக், இன்று அதையே ஒரு வேலையாக செய்யும் அளவுக்கு மாறிவிட்டது. இன்று டிக்டாக் ஆபாசங்கள், ஜாதி சண்டைகள், பிறரை புண்படுத்துவது போன்ற செயல்களுக்காக பயன்படுத்தப்படும் கூடாரமாக மாறிவிட்டது. அதுமட்டுமின்றி தற்போது டிக்டாக் மூலம் பணம் பறிக்கும் சம்பவமும் அரங்கேறியுள்ளது. மதுரை எல்லீஸ் நகர் சூர்யா குடியிருப்பு வளாகத்தை சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவருக்கு வயது 24. இவர் பொழுதுபோக்கிற்காக டிக்டாக் செயலியை பயன்படுத்தி வந்த நிலையில், திருப்பூரை சேர்ந்த சுசி என்பவர் டிக்டாக் செயலியில் அம்முகுட்டி என்ற
 

வேலையில்லாதவர்களுக்காக கண்டுபிடிக்கப்பட்ட டிக்டாக், இன்று அதையே ஒரு வேலையாக செய்யும் அளவுக்கு மாறிவிட்டது. இன்று டிக்டாக் ஆபாசங்கள், ஜாதி சண்டைகள், பிறரை புண்படுத்துவது போன்ற செயல்களுக்காக பயன்படுத்தப்படும் கூடாரமாக மாறிவிட்டது. அதுமட்டுமின்றி தற்போது டிக்டாக் மூலம் பணம் பறிக்கும் சம்பவமும் அரங்கேறியுள்ளது.

மதுரை எல்லீஸ் நகர் சூர்யா குடியிருப்பு வளாகத்தை சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவருக்கு வயது 24. இவர் பொழுதுபோக்கிற்காக டிக்டாக் செயலியை பயன்படுத்தி வந்த நிலையில், திருப்பூரை சேர்ந்த சுசி என்பவர் டிக்டாக் செயலியில் அம்முகுட்டி என்ற பெயரில் அறிமுகமாகியுள்ளார். இந்நிலையில், டிக்டாக்கில் பழகிய அந்த பெண்ணை நம்பி ராமச்சந்திரன் பலமுறை அவரது வங்கி கணக்கிற்கு 97000 ரூபாய் வரை பணம் அனுப்பியுள்ளார்.

இந்நிலையில் அப்பெண்ணின் டிக்டாக் மற்றும், முகநூல் பக்கம் போலியானது என்பதை தெரிந்துகொண்ட ராமச்சந்திரன் எஸ் எஸ் காலனி காவல்நிலையத்தில் இதுகுறித்து புகார் தெரிவித்துள்ளார். இதையடுத்து மதுரை எஸ் எஸ் காலனி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.