×

இலங்கை கடற்பகுதிக்குள் நுழைந்ததாக, 97 படகுகளுக்கு மீன்பிடி அனுமதி மறுப்பு

ராமநாதபுரம் இலங்கை கடற்பகுதிக்குள் நுழைந்ததாக கூறி, ராமேஸ்வரத்தில் 97 விசைப் படகுகளுக்கு மீன்பிடிக்க அதிகாரிகள் அனுமதி மறுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் நிவர் புயல் காரணமாக படகுகள் துறைமுகத்தில் நிறுத்தி வைத்திருந்தனர். இந்த நிலையில் புயல் கரையை கடந்ததால், இன்று ராமேஸ்வரம் மீனவர்கள் கடலுக்குச் செல்ல, மீன்வளத்துறை அதிகாரிகள் அனுமதிச்சீட்டு வழங்கினர். அப்போது, இலங்கையின் கடல் பகுதிக்குள் சென்றதாக கூறி 97 விசைப்படகுகளுக்கு அதிகாரிகள் அனுமதி சீட்டு வழங்க மறுத்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த
 

ராமநாதபுரம்

இலங்கை கடற்பகுதிக்குள் நுழைந்ததாக கூறி, ராமேஸ்வரத்தில் 97 விசைப் படகுகளுக்கு மீன்பிடிக்க அதிகாரிகள் அனுமதி மறுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் நிவர் புயல் காரணமாக படகுகள் துறைமுகத்தில் நிறுத்தி வைத்திருந்தனர். இந்த நிலையில் புயல் கரையை கடந்ததால், இன்று ராமேஸ்வரம் மீனவர்கள் கடலுக்குச் செல்ல, மீன்வளத்துறை அதிகாரிகள் அனுமதிச்சீட்டு வழங்கினர். அப்போது, இலங்கையின் கடல் பகுதிக்குள் சென்றதாக கூறி 97 விசைப்படகுகளுக்கு அதிகாரிகள் அனுமதி சீட்டு வழங்க மறுத்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த மீனவர்கள், அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து பேசிய மீனவர்கள், புயல் காரணமாக கடந்த ஒரு வாரமாக தொழிலின்றி தவித்து வந்ததாகவும், இன்று கடலுக்கு செல்வதற்காக கடன் வாங்கி ஐஸ் கட்டிகள் மற்றும் மீன்பிடி உபகரணங்களை சரிசெய்த நிலையில், அதிகாரிகள் அனுமதி மறுத்ததாகவும் தெரிவித்தனர். மேலும், இதனால், தங்களுக்கு பெரும் இழப்பிடு ஏற்படுத்தியுள்ளதாக மீனவர்கள் வேதனையுடன் தெரிவித்தனர். இதனிடையே,தாங்கள் பாரம்பரியமாக மீன்பிடித்த இடத்தில் தான் மீன்பிடித்தோம் என்றும், இதற்காக மீன்வளத்துறையின் நடவடிக்கையை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் மீனவ சங்க தலைவர் சகாயம் தெரிவித்தார்.